உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

37

இளங்குமரனார் தமிழ்வளம் -37

இன்னும் சொன்னால், பறைச்சியோடு கூடிக் கொஞ்சிக் குலாவுவது ஒருவகையோ? பனத்தியோடு கூடிக் கொஞ்சிக் குலாவுவது என்ன ஒரு தனிவகையோ? அறிவிருந்தால் இவற்றை எண்ணிப் பார்க்க வேண்டாவா? என்கிறார் சிவவாக்கியர்.

"பறைச்சி யாவ தேதடா பனத்தி யாவ தேதடா

இறைச்சி தோல்எலும்பினும் இலக்க மிட்டி ருக்குதோ? பறைச்சி போகம் வேறதோ? பனத்தி போகம் வேறதோ? பறைச்சி யும்ப னத்தியும் பகுந்து பாரும் உம்முளே!

CC

இவ்வளவு சொன்னதும் போதாது என்னும் எண்ணத்தால் மேலும் சொன்னார் சிவவாக்கியர்:

எருமையும் பசுவும் கூடிக் கலப்பதில்லை; ஏனெனில் வேறு வேறு இனமானவை அவை!

ஒருவேளை அவை கலந்தாலும் அவற்றின் கரு வேறு பாடான ஓர் உருவையே ஆக்கும். ஆனால், வேதியன் ஒருவனும் புலைச்சி ஒருத்தியும் கூடிக் கலந்தால் வேறுபாடாகக் குழந்தை பிறப்பதில்லையே; இதைக் கண்டேனும் சாதி சாதி என்று சாவும் சண்டாளர்க்கு அறிவு வரக்கூடாதா? என்று வருந்துகிறார்.

"மேதி யோடும் ஆவுமே விரும்பி யேபு ணர்ந்திடில் சாதி பேத மாய்உருத் தரிக்கு மாறு போலவே வேதம் ஓது வானுடன் புலைச்சி சென்று மேவிடில் பேத மாய்ப்பி றக்கிலாத வாற தென்ன பேசுமே."

பகவன் என்னும் பார்ப்பனனும், ஆதி என்னும் புலைச்சியும் கூடிப் பெற்ற பிள்ளைகளே திருவள்ளுவர் ஒளவையார் முதலியோர் என்னும் கதை விரித்தவர்களேனும் சாதி ஒழிப்புக் கொடியைத் தூக்கியிருக்க வேண்டுமே! எள்ளல் கதை சொல்லி இழிவாக்குவதற்கல்லவோ அவர்கள் உணர்வு பயன்பட்டுள்ளது. பயன்பாட்டு வழியில் சென்றிருந்தால் சாதியின் முடை நாற்றம் இன்றுவரை போகாதிருக்காதே!

"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று பாப்பாவுக்கும்,