உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே”

41

என்று வளர்ந்தோர்க்கும் பறையறைந்த பின்னரும், வடக்கே காந்தியும், தெற்கே பெரியாரும் வரிந்து கட்டிக் கொண்டு பாடுபட்ட பின்னரும் வாண வேடிக்கை காட் டி வயப்படுத்திக் கொண்டிருக்கும் வல்லாண்மைச் சாதிக் குறும்பு, சிவவாக்கியர் வாயை மூடத்தானா வழிகாணத் திண்டாடி இருக்கும்?

ஆனால் ஒன்று. சிவவாக்கியர் தேர்ந்த மெய்யுணர்வாளர். அவர் வாக்கை வாழ்வாக்கிக் கொண்டால் வையகம் வாழும்! இல்லையேல் அதற்கு உய்வு அரிது! அவர் வாக்கென்ன வாக்கு பொய் வாக்கு இல்லாத மெய்வாக்குத்தானே அவர் வாக்கு!