உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடலின் யாப்பமைதி "ஒரு கல்லில் மூன்று காய்' என்பது போன்றதாம், ஒரு பாடலை மூன்று வகைப் பாடலாகப் படிக்கத் தக்க வகையில் இயற்றியுள்ளார். ஆதலால், சை வகுத்துப் பாடுவார்க்கு னிய வாய்ப்புடையதாகப்

பாடல்கள் அமைந்துள்ளன.

சிவவாக்கியர், தாம் பாடும் பாடல்கள் எல்லாவற்றையும் எழுசீர்ச் சந்த விருத்தத்தில் அமைத்துள்ளார்.

66

“ஓடி ஓடி ஓடி ஓடி உட்க லந்த சோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்க ளுங்க ழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்

கோடி கோடி கோடி கோடி எண்ணி றந்த கோடியே.'

55

முதல் ஆறு சீர்களும் மாச்சீராகவும் இறுதி ஒரு சீரும் விளச்சீராகவும், அடிதோறும் ஐந்தாம் சீர் முதற்சீர்க் கேற்ற மோனை அமைதி பெற்றதாகவும் அமைந்துள்ளது அறிக.

இனி இப்பாடல் ஆறுசீர்ச்சந்த விருத்தமாகவும் அமைகின்றது

காண்க.

66

ஓடி ஓடி ஓடியோடி உட்க லந்த சோதியை

நாடி நாடி நாடிநாடி நாட்க ளுங்க ழிந்துபோய் வாடி வாடிவாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்

கோடி கோடிகோடி கோடி எண்ணி றந்த கோடியே."

இதில் மா மா காய் அல்லது விளம், மா மா விளம் அல்லது காய் என ஆறுசீர் வருதலும் நான்காம் சீர் மோனை பெற்று வருதலும் காண்க.

இனி இதே பாடல்,

"ஓடியோடி ஓடியோடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங்க ழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே"