உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

45

என்பது போலத் தம் கருத்தை எளிமையாய் விளக்கமாய் அறிய வைக்கிறார். அந்நிலைகளில் எதுகை மோனை முதலியவற்றைப் பார்க்கிலும் பொருள் தெளிவு, பொருள் விளக்கம் என்பனவே சிவவாக்கியரால் போற்றப்படுகின்றனவாம். சில பாடல்களில் ஒலி ஒப்புமையால் எதுகை அமைத்துக் கொள்கிறார் (70)(. சில பாடல்களில் இரண்டடிக்கு ஓர் எதுகை கொள்கிறார் (53). சில பாடல்களின் முடிநிலை ஒன்றாக அமைத்துக்கொள்கிறார்.

"ஆலம் உண்ட கண்டர் ஆணை

அம்மை ஆணை உண்மையே” (120)

'ஆலம் உண்ட கண்டர் பாதம்

அம்மை பாதம் உண்மையே” (22, 150)

கொச்சைவழக்கு சிதைவு முதலியவற்றையும் பாடல் ஓட்டத்திற்கு ஏற்ப ஏற்றுப் போற்றிக்கொள்கிறார்; ஒன்றல்லவோ என்பதை 'ஒன்றலோ' என்றும், பிதற்றுகிறீர் என்பதைப் 'பிதற்றுறீர்' என்றும், ஓதுகிறீர் என்பதை 'ஓதுறீர்' என்றும், வேண்டும் என்பதை ‘வேணும்' என்றும் பயில வழங்குகிறார். ஐந்து என்பதைப் பெரும்பாலும் 'அஞ்சு' எனவே ஆள்கிறார்.

பற்றுமின்கள், நோக்கவல்லிரேல், ஓர்கிலீர், உணர்கிலீர், எங்ஙனே இன்னவாறாக அரிய இலக்கிய ஆட்சிகளையும் வழங்குகிறார்.

'அசங்குதல்' போன்ற அரிய ஆட்சியிலும் (42) தலைப்

படுகிறார்.

சித்தர்கள் சொல்லாட்சிகள் சில கலைச் சொல்லாக்கத் திற்கு ஏற்றவையாகவும் ஏந்தானவையாகவும் உள்ளன. நாடிக்கலை மூச்சுக்கலை பயில்வார்க்கு மூல வைப்பகமாகத் திகழ்கின்றன. ஓவியர்க்கும் சித்தர் பாடல்கள் விருந்தாம் என்பது ஒரு பாடலால் வெளிப்படுகின்றது. அதனை ஓவியமாக நெடுங்காலத்திற்கு முன்னரே வரைந்து போற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வோவியப் பாட்டு;

நவ்விரண்டும் காலதாய், நவின்றமல் வயிறதாய், சிவ்விரண்டு தோளதாய், சிறந்தவவ்வு வாயதாய், யவ்விரண்ட கண்ணதாய், அமர்ந்துநின்ற நேர்மையில் செவ்வையொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே.