உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

நூல்

காப்பும் அவையடக்கமும்

அரிய தோர்ந மச்சிவாயம் ஆதி யந்தம் ஆனதும்

ஆறி ரண்டு நூறுதேவர் அன்று ரைத்த மந்திரம் கூரிய தோர்எ ழுத்தையுன்னிச் சொல்லு வேன்சிவ வாக்கியம் தோட தோட பாவமாயை தூரத் தூர ஓடவே

கரிய தோர்மு கத்தையுற்ற கற்ப கத்தைக் கைதொழக் கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து திக்கவே பெரிய பேர்கள் சிறியபேர்கள் கற்று ணர்ந்த பேரெலாம் பேய னாகி ஓதிடும் பிழைபொ றுக்க வேண்டுமே.

எழுத்து நிலை

ஆன அஞ்செ ழுத்துளே அண்ட மும்ம கண்டமும் ஆன அஞ்செ ழுத்துளே ஆதி யான மூவரும் ஆன அஞ்செ ழுத்துளே அகார மும்ம காரமும்

ஆன அஞ்செ ழுத்துளே அடங்க லாவ துற்றவே.

ஓடி ஓடி ஓடியோடி உட்க லந்த சோதியை நாடி நாடி நாடிநாடி நாட்க ளுங்க ழிந்துபோய் வாடி வாடி வாடிவாடி மாண்டு போன மாந்தர்கள் கோடி கோடி கோடிகோடி எண்ணி றந்த கோடியே.

உருத்த ரித்த நாடியில் ஒடுங்கு கின்ற வாயுவைக் கருத்தி னாலி ருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் விருத்தர் தாமும் பாலராவர் மேனி யுஞ்சி வந்திடும் அருள்த ரித்த நாதர்பாதம் அம்மை பாதம் உண்மையே.

வடிவு கண்டு கொண்டபெண்ணை மற்றொ ருவ்வன் நத்தினால் விடுவ னோஅ வனைமுன்னர் வெட்ட வேண்டும் என்பனே நடுவன் வந்த ழைத்தபோது நாறு மிந்த நல்லுடல் சுடலை மட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக்கொ டுப்பரே. என்னி லேயி ருந்தவொன்றை யான றிந்த தில்லையே என்னி லேயி ருந்தவொன்றை யான றிந்து கொண்டபின் என்னி லேயிருந்தவொன்றை யாவர் காண வல்லரோ என்னி லேயிருந்திருந்து யானு ணர்ந்து கொண்டெனே.

1

2

3

4

5