உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

நினைப்ப தொன்று கண்டிலேன் நீய லாது வேறிலை நினைப்பு மாய்ம றப்புமாய் நின்ற மாயை மாயையோ அனைத்து மாய்அ கண்டமாய் அனாதி முன்ன னாதியாய் எனக்குள் நீயு னக்குள்நான் இருக்கு மாற தெங்ஙனே.

மண்ணும் நீயவ் விண்ணும்நீ மறிக டல்கள் ஏழும்நீ எண்ணும் நீயெ ழுத்தும்நீ இசைந்த பண்ணெ ழுத்தும்நீ கண்ணும் நீம ணியும்நீ கண்ணு ளாடும் பாவைநீ நண்ணு நீர்மை நின்றபாதம் நண்ணு மாற ருளிடாய்.

அரியும் அல்ல அயனுமல்ல அப்பு றத்தில் அப்புறம் கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் பெரிய தல்ல சிறியதல்ல பற்று மின்கள் பற்றுமின்கள் துரிய முங்க டந்துநின்ற தூரத் தூரத் தூரமே.

47

7

8

9

அந்தி மாலை உச்சிமூன்றும் ஆடு கின்ற தீர்த்தமும் சந்தி தர்ப்ப ணங்களும் தபங்க ளுஞ்செ பங்களும் சிந்தை மேவு ஞானமுந் தினஞ்செ பிக்கு மந்திரம்

எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே.

10

கதாவு பஞ்ச பாதகங் களைத்து ரந்த மந்திரம்

இதாமி தாமி தல்லவென்றிங் கெய்த்து ழல்லும் ஏழைகாள்

சதாவி டாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்

இதாமி தாமி ராமராம ராம என்னும் நாமமே.

11

நான் தேது நீயதேது நடுவில் நின்ற தேதடா கோன தேது குருவதேது கூறி டுங்கு லாமரே ஆன தேத ழிவதேதே அப்பு றத்தில் அப்புறம் ஈன தேதி ராமராம ராம என்னும் நாமமே. சாத்தி ரங்கள் ஓதுகின்ற சட்ட நாத பட்டரே

வேர்த்தி ரைப்பு வந்தபோது வேதம் வந்தே உதவுமோ? மாத்தி ரைப்போ தும்முளே மறித்து நோக்க வல்லிரேல் சாத்தி ரப்பை நோய்க ளேது சத்தி முத்தி சித்தியே.

நாலு வேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர் பாலுள் நெய்க லந்தவாறு பாவி காள்நீர் அறிகிலீர் ஆல முண்ட கண்டனார் அகத்து ளேயி ருக்கவே

காலன் என்று சொல்லுவீர் கனாவி லும்மஃ தில்லையே

12

13

14