உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம்

37

வித்தில் லாத சம்ப்ரதாயம் மேலு மில்லை கீழுமில்லை தச்சில் லாத மாளிகை சமைந்த வாறெ தெங்ஙனே பெற்ற தாயை விற்றடிமை கொள்ளு கின்ற பேதைகாள் சித்தில் லாத போதுசீவன் இல்லை இல்லை இல்லையே. அஞ்சும் மூன்றும் எட்டதாகும் அநாதி யான மந்திரம் நெஞ்சி லேநி னைந்துகொண்டு நூறு ருச்செ பிப்பிரேல் பஞ்ச மான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்

பஞ்சு போலப் பறக்குமென்று நான்ம றைகள் பன்னுமே. அண்ட வாசல் ஆயிரம் ப்ரசண்ட வாசல் ஆயிரம் ஆறி ரண்டு நூறுகோடி ஆன வாசல் ஆயிரம் இந்த வாசல் ஏழைவாசல் ஏக போக மானவாசல் எம்பி ரானி ருக்கும்வாசல் யாவர் காண வல்லரே? சாம நாலு வேதமும் சகல சாத்தி ரங்களும்

சேம மாக ஓதிலும் சிவனை நீவிர் அறிகிலீர்

15

16

17

காம நோயை விட்டுநீர் கருத்தி னுள்ளே உணர்ந்தபின் ஊமை யான காயமாய் உள்ளி ருப்பன் ஈசனே.

18

சங்கி ரண்டு தாரையொன்று சன்னல் பின்னல் ஆகையால் மங்கி மாளு தேயுலகில் மானி டங்கள் எத்தனை

சங்கி ரண்டை யுந்தவிர்த்துத் தாரை ஊத வல்லிரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

19

அஞ்செ ழுத்தி லேபிறந் தஞ்செ ழுத்தி லேவளர்ந் தஞ்செ ழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் அஞ்செ ழுத்தில் ஓரெழுத் தறிந்து கூற வல்லிரேல்

அஞ்ச லஞ்ச லென்றுநாதன் அம்ப லத்தில் ஆடுமே.

20

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதி யான தஞ்சுமே

பிஞ்சு பிஞ்ச தல்லவோ பித்தர் காள்பி தற்றுறீர்

நெஞ்சில் அஞ்சு கொண்டுநுர் நின்றோ துகக வல்லிரேல் அஞ்சும் இல்லை ஆறுமில்லை அனாதி யான தொன்றுமே.

21

நீள வீடு கட்டுறீர் நெடுங்க தவ்வு சாத்துறீர்

வாழ வேண்டும் என்றலோ மகிழ்ந்தி ருந்த மாந்தரே

காலன் ஓலை வந்தபோது கைய கன்று நிற்பிரே

ஆலம் உண்ட கண்டர்பாதம் அம்மை பாதம் உண்மையே.

22