உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

ஓடம் உள்ள போதலோ ஓடி யேயு லாவலாம் ஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம் ஓடம் உடைந்த போதிலே ஒப்பி லாத வெளியிலே ஆடும் இல்லை கோலுமில்லை யாரு மில்லை யானதே.

வீடெ டுத்து வேள்விசெய்து மெய்யி னோடு பொய்யுமாய் மாடு மக்கள் பெண்டிர்சுற்றம் என்றி ருக்கும் மாந்தர்காள் நாடு பெற்ற நடுவர்கையில் ஓலை வந்த ழைத்திடில் ஓடு பெற்ற அவ்விலை ஒன்றும் பெறாதிவ் வுடலம்மே. அண்ண லேஅ நாதியே அநாதி முன்ன நாதியே பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம் கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே மண்ணு ளோரும் விண்ணுளோரும் வந்த வாறும் எங்ஙனே. பண்டு நான்ப றித்தெறிந்த பன்ம லர்கள் எத்தனை

பாழி லேசெ பித்துவிட்ட மந்தி ரங்கள் எத்தனை மிண்ட னாய்த்தி ரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை மீள வுஞ்சி வாலயங்கள் சூழ வந்த தெத்தனை அண்டர் கோன்இ ருப்பிடம் அறிந்து ணர்ந்த ஞானிகள்

பண்ட றிந்த பான்மைதன்னை யாவர் அறிய வல்லரே விண்ட வேதப் பொருளையன்றி வேறு கூற வகையிலாக்

கண்ட கோயில் தெய்வமென்று கையெ டுப்ப தில்லையே.

49

23

24

25

26

தூரம் தூரம் தூரமென்று சொல்லு வார்கள் சோம்பர்கள் பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்ப ராபரம்

ஊரு நாடு காடுமோடி உழன்று தேடும் ஊமைகாள்!

நேர தாக உம்முளே அறிந்து ணர்ந்து கொள்ளுமே!

27

தங்கம் ஒன்று ரூபம்வேறு தன்மை யான வாறுபோல்

செங்கண் மாலும் ஈசனும் சிறந்தி ருந்த எம்முளே விங்க எங்கள் பேசுவார் விளங்கு கின்ற மாந்தரே! எங்கும் ஆகி நின்றநாமம் நாமம் இந்த நாமமே!

நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்த நித்தம் நீரிலே விருப்ப மோடு நீர்குளிக்கும் வேத வாக்யம் கேளுமின் நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்

சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே.

28

29