உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் -37

பாட்டி லாத பரமனைப் பரம லோக நாதனை நாட்டி லாத நாதனை நாரி பங்கர் பாகனை கூட்டி மெள்ள வாய்புதைத்துக் குணுகு ணுத்த மந்திரம் வேட்ட காரர் குசுகுசுப்பைக் கூப்பி டாக முடிந்ததே.

செய்ய தெங்கி லேஇளநீர் சேர்ந்த கார ணங்கள்போல் ஐயன் வந்திங் கென்னுளம் புகுந்து கோயில் கொண்டனன் ஐயன் வந்திங் கென்னுளம் புகுந்து கோயில் கொண்டபின் வைய கத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. மாறு பட்ட மணிதுலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் ஊறு பட்ட கல்லின்மீதே ஊற்று கின்ற மூடரே மாறு பட்ட தேவரும் மறிந்து நோக்கும் என்னையும் கூறு பட்டுத் தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.

கோயி லாவ தேதடா குளங்க ளாவ தேதடா கோயிலுங்கு எங்களும் கும்பி டுங்கு லாமரே

30

ہیں

31

32

கோயி லும்ம னத்துளே குளங்க ளும்ம னத்துளே

ஆவ தூவும் அழிவதூவும் இல்லை இல்லை இல்லையே.

33

செங்க லுங்க ருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்

செம்பி லுந்த ராவிலும் சிவனி ருப்பன் என்கிறீர் உம்ப தம்ம றிந்துநீர் உம்மை நீர றிந்தபின் அம்ப லம்நி றைந்தநாதர் ஆடல் பாடல் ஆகுமே.

பூசை பூசை என்றுநீர் பூசை செய்யும் பேதைகாள் பூசை யுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம் ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ ஏது பூசை கொண்டதோ இன்ன தென்றி யம்புமே.

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவே ஓதினும் பெருக்க நீறு பூசினும் பிதற்றி னும்பி ரானிரான்

உருக்கி நெஞ்சை உட்கலந்திங் குண்மை கூற வல்லிரேல் சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூட லாகுமே.

கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்த தீமு டுக்கினால் கலத்தி லேக ரந்ததோ கடுத்த தீக்கு டித்ததோ நிலத்தி லேக லந்ததோ நீள்வி சும்பு கொண்டதோ மலத்தின் மாயை நீக்கியே மனத்து ளேக ரந்ததோ.

34

35

36

37