உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

பறைச்சி யாவ தேதடா பனத்தி யாவ தேதடா இறைச்சி தோலெ லும்பினும் இலக்க மிட்டி ருக்குதோ பறைச்சி போகம் வேறதோ பனத்தி போகம் வேறதோ பறைச்சி யும்ப னத்தியும் பகுந்து பாரும் உம்முளே.

வாயி லேகு தித்தநீரை எச்சில் என்று சொல்லுறீர் வாயி லேகு தப்புவேதம் வேதம் என்னக் கடவதோ வாயில் எச்சில் போகவென்று நீர தனைக்கு டிப்பீர்காள் வாயில் எச்சில் போனவண்ணம் வந்தி ருந்து சொல்லுமே

ஓது கின்ற வேதமெச்சில் உள்ள மந்தி ரங்களெச்சில் போத கங்க ளானவெச்சில் பூத லங்கள் ஏழுமெச்சில் மாதி ருந்த விந்துமெச்சில் மதியு மெச்சில் ஒளியுமெச்சில் ஏதில் எச்சில் இல்லையில்ல தில்லை இல்லை இல்லையே. பிறப்ப தற்கு முன்னெலாம் இருக்கு மாற தெங்ஙனே பிறந்து மண்ணிலி றந்துபோய் இருக்கு மாற தெங்ஙனே குறித்து நீர்சொ லாவிடில் குறிப்பில் லாத மாந்தரே அறுப்ப னேசெ வியிரண்டும் அஞ்செ ழுத்து வாளினால்.

அம்ப லத்தை அம்புகொண்டு அசங்கென் றால சங்குமோ கம்ப மற்ற பாற்கடல் கலங்கென் றால்க லங்குமோ

51

38

39

40

41

இன்ப மற்ற யோகியை இருளும் வந்த ணுகும்மோ செம்பொன் அம்ப லத்துளே தெளிந்த தேசி வாயமே.

42

சித்தம் ஏது சிந்தையேது சீவன் ஏது சித்தரே சத்தி ஏது சம்புவேது சாதி பேதம் அற்றது

முத்தி ஏது மூலமேது மூல மந்தி ரம்மெது

வித்தி லாத வித்திலே இன்ன தென்றி யம்புமே.

43

சித்த மற்றுச் சிந்தையற்றுச் சீவ னற்று நின்றிடம் சத்தி யற்றுச் சம்புவற்றுச் சாதி பேத மற்றுநன் முத்தி யற்று மூலமற்று மூல மந்தி ரங்களும் வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்த தேசி வாயமே.

சாதி யாவ தேதடா சலந்தி ரண்ட நீரலோ

பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ காதில் வாளி காரைகம்பி பாட கம்பொன் ஒன்றலோ சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.

44

45