உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் -37 378

கறந்த பால்மு லைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா துடைந்து போன சங்கினோசை உயிர்க ளும்மு டற்புகா விரிந்த பூவு திர்ந்தகாயும் மீண்டும் போய்ம ரம்புகா

இறந்த வர்பி றப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.

தரையி னிற்கி டந்தபோ தன்று தூமை என்றிலீர்;

துறைய றிந்த நீர்குளித் தன்று தூமை என்றிலீர்;

பறைய றைந்து நீர்பிறந் தன்று தூமை என்றிலீர்; புரையி லாத ஈசரோடு பொருந்து மாற தெங்ஙனே?

தூமை தூமை என்றுளே துவண்ட லையும் ஏழைகாள் தூமை யான பெண்ணிருக்கத் தூமை போன தெவ்விடம் ஆமை போல மூழ்கிவந் தநேக வேதம் ஓதுறீர் தூமை யுந்தி ரண்டுருண்டு சொற்கு ருக்கள் ஆனதே. சொற்கு ருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும் மெய்க்கு ருக்கள் ஆனதும் வேண பூசை செய்வதும் சற்கு ருக்கள் ஆனதும் சாத்தி ரங்கள் சொல்வதும் செய்க்கு ருக்கள் ஆனதும் திரண்டு ருண்ட தூமையே. கைவ டங்கள் கொண்டுநீர் கண்சி மிட்டி நிற்கிறீர் எவ்வி டங்கள் கண்டுநீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர் பொய்யிறந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல் மெய்கி டந்த தும்முளே விரைந்து கூடல் ஆகுமே. ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல் மாடு காட்டி என்னைநீ மதிம யக்கல் ஆகுமோ? கோடு காட்டி யானையைக் கொன்று ரித்த கொற்றவா வீடு காட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

இடத்த துன்கண் சந்திரன் வலத்த துன்கண் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலம் மான்மழு எடுத்த பாத நீள்முடி எண்தி சைக்கும் அப்புறம் உடல்க லந்து நின்றமாயம் யாவர் காண வல்லரோ? நாழி யுப்பும் நாழியப்பும் நாழி யான வாறுபோல் ஆழி யோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்தி ருந்திடும் ஏறில் ஏறும் இறையையும் இயங்கு சக்ர தரனையும் வேறு வேறு பேசுவார் வீழ்வர் வீணில் நரகிலே.

46

47

48

49

50

51

52

53