உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

தில்லை நாய கன்னவன் திருவ ரங்க னும்மவன் எல்லை யான புவனமும் ஏக முத்தி யும்மவன் பல்லும் நாவும் உள்ளபேர் பகுந்து கூறி மகிழுவார் வல்ல பங்கன் பேசுவார் வாய்பு ழுத்து மாய்வரே.

எத்தி சைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் மத்தி யான வித்துளே முளைத்தெ ழுந்த வச்சுடர் சித்த முந்தெ ளிந்துவேத கோயி லுந்தி றந்தபின் அத்தன் ஆடல் கண்டபின் அடங்கல் ஆடல் காணுமே. உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்து ணர்ந்து பாடுவீர் பற்ற றுத்து நின்றுநீர் பராப ரங்கள் எய்துவீர் செற்ற மாவை உள்ளரைச் செருக்க றுத்தி ருத்திடில் சுற்ற மாக உம்முளே சோதி என்றும் வாழுமே. போத தாய்எ ழுந்ததும் புனல தாடி வந்ததும்

தாத தாய்ப்பு குந்ததும் தணல தாய்வி ளைந்ததும் ஓத டாஅஞ் சும்மூன்றும் ஒன்ற தான அக்கரம் ஓத டாநீ ராமராம ராம வென்னும் நாமமே.

அகாரம் என்ற அக்கரத்துள அவ்வு வந்து தித்ததோ உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வு வந்து தித்ததோ அகார மும்உ காரமும் சிகார மின்றி நின்றதோ விகார மற்ற யோகிகாள் விரித்து ரைக்க வேணுமே. அறத்தி றங்க ளுக்கும்நீ அகண்ட எண்தி சைக்கும்நீ திறத்தி றங்க ளுக்கும்நீ தேடு வார்கள் சிந்தைநீ உறக்கம் நீயு ணர்வும்நீ உட்க லந்த சோதிநீ மறக்கொ ணாத நின்கழல் மறப்பி னும்நீ குடிகொளே.

53

54

55

56

57

58

59

அண்டம் நீஅ கண்டம்நீ ஆதி மூல மானோன்நீ கண்டம் நீக ருத்தும்நீ காவி யங்கள் ஆனோன்நீ

புண்டரீக மன்றுளே புணரு கின்ற புண்ணியர்

கொண்ட கோல மானநேர்மை கூர்மை என்ன கூர்மையே.

60

மைய டர்ந்த கண்ணினார் மயக்கி டும்ம யக்கிலே ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல் உற்றி ருப்பிர்காள் மெய்ய டர்ந்த சிந்தையாய் விளங்கு ஞானம் எய்தினால் உய்ய டர்ந்து கொண்டுநீங்கள் ஊழி காலம் வாழ்விரே.

61