உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம்

கருவி ருந்து வாசலால் கலங்கு கின்ற ஊமைகாள்

37

குருவி ருந்து சொன்னவார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் உருவி லங்கு மேனியாகி உம்ப ராகி நின்றநீர்

திருவி லங்கு மேனியாகிச் சென்று கூடல் ஆகுமே.

62

தீர்த்த மாட வேண்டுமென்று தேடு கின்ற தீனர்காள் தீர்த்த மாடல் எவ்விடம் தெளிந்து நீரி யம்புவீர் தீர்த்த மாக உம்முளே தெளிந்து நீரி ருந்தபின் தீர்த்த மாக உள்ளதும் சிவாய அஞ்செ ழுத்துமே.

கழுத்தை யும்நி மிர்த்திநல்ல கண்ணை யும்வி ழித்துநீர் பழுத்து வாய்வி ழுந்துபோன பாவம் என்ன பாவமே அழுத்த மான வித்திலே அனாதி யாயி ருப்பதோர் எழுத்தி லாஎ ழுத்திலே இருக்க லாமி ருத்துமே. கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும் உண்டு றங்கு மாறுநீர் உணர்ந்தி ருக்க வல்லிரேல் பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேத சுத்தராய் அண்ட முத்தி ஆகிநின்ற ஆதி மூலம் ஆவிரே. ஈன்ற வாச லுக்கிரங்கி எண்ணி றந்த போவிர்காள் கான்ற வாழை மொட்டலர்ந்த கார ணம்நீர் அறிகிலீர் நான்ற வாச லைத்திறந்து நாடி நோக்க வல்லிரேல் தோன்று மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே. உழலும் வாச லுக்கிரங்கி ஊச லாடும் ஊமைகாள் உழலும் வாச லைத்துறந்து உண்மை சேர எண்ணிலீர் உழலும் வாச லைத்துறந்து உண்மை நீரு ணர்ந்தபின் உழலும் வாச லுள்ளிருந்த உண்மை தானும்ஆவிரே. மூல நாடி தன்னிலே முளைத்தெ ழுந்த சோதியை நாலு நாழி உம்முளே நாடி யேயி ருந்தபின் பால னாகி வாழலாம் பரப்பி ரம்மம் ஆகலாம்

63

64

65

66

67

ஆல முண்ட கண்டராணை அம்மை ஆணை உண்மையே.

68

இருக்க வேண்டும் என்றபோ திருக்க லாயி ருக்குமோ மரிக்க வேண்டும் என்றலோ மண்ணு ளேப டைத்தனர் சுருக்க மற்ற தம்பிரான் சொன்ன அஞ்செ ழுத்தையும் மரிக்கு முன்வ ணங்கிடீர் மருந்தெ னப்ப தம்கெடீர்.

69