உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம் ஒரெ ழுத்துளோ விண்ப ரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ விண்ப ரந்த மூலஅஞ் செழுத்து ளேமு ளைத்ததே அங்க லிங்க பீடமாய் அமர்ந்த தேசி வாயமே.

சிவாய மென்ற அக்கரம் சிவனி ருக்கும் அக்கரம் உபாயம் என்று நம்புதற் குண்மை யான அக்கரம் கபாடம் அற்ற வாசலைக் கடந்து போன வாயுவை உபாயம் இட்ட ழைக்குமே சிவாய அஞ்செ ழுத்துமே.

உருவு மல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவு மல்ல காதமல்ல மற்ற தல்ல அற்றதல்ல பெரிய தல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானுமல்ல

55

70

71

அரிய தாகி நின்றதன்மை யாவர் காண வல்லரே.

72

ஆத்து மன்அ னாதியோ ஆத்து மாஅ னாதியோ மீத்தி ருந்த ஐம்பொறி புலன்க ளும்ம னாதியோ தாக்க மிக்க நூல்களும் சதாசி வமும்ம னாதியோ வீக்க வந்த யோகிகாள் விரைந்து ரைக்க வேணுமே. அறிவி லேபி றந்திருந்த ஆக மங்கள் ஓதுறீர்

நெறியி லேம யங்குகின்ற நேர்மை ஒன்றும் அறிகிலீர் உறியி லேத யிரிருக்க ஊர்பு குந்து வெண்ணெய்தேடும் அறிவி லாத மாந்தரோ டணுகு மாற தெங்ஙனே. இருவ ரங்க மும்பொருந்தி என்பு ருகி நோக்கிலீர் உருவ ரங்க மாகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் கருவ ரங்க மாகிநின்ற கற்ப னைக டந்துபின் திருவ ரங்க மென்றுநீர் தெளிந்தி ருக்க வல்லிரே.

கருக்கு ழியில் ஆசையாகிக் காத லுற்று நிற்கிறீர் குருக்கி டுக்கும் ஏழைகாள் குலாவு கின்ற பாவிகாள் திருத்தி ருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செ ழுத்தையும்

உருக்க ழிக்கும் முன்னமே உரையு ணர்ந்து கொள்ளுமே.

மண்ணி லேபி றக்கவும் வழக்க லாது ரைக்கவும் எண்ணி லாத கோடிதேவர் என்ன துன்ன தென்னவும் கண்ணி லேயே மணியிருக்கக் கண்ம றைந்த வாறுபோல் எண்ணில் கோடி தேவரும் இதன்க ணால்வி ழிப்பதே.

73

74

75

76

77