உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

மண்க லங்க விழ்ந்தபோது வைத்து வைத்த டுக்குவார் வெண்க லங்க விழ்ந்தபோது வேணு மென்று பேணுவார் நங்க லங்க விழ்ந்தபோது நாறு மென்று போடுவார் எண்க லந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே.

மிக்க செல்வம் நீர்ப டைத்த விறகு மேவிப் பாவிகாள்

விக்கு டன்கொ ளுத்தி மேனி வெந்து போவ தறிகிலீர் மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயைகாணும் இவையெலாம் மறலி வந்த ழைத்த போது வந்து கூட லாகுமோ ஒக்க வந்து மாது டன்செ றிந்தி டத்தில் அழகியே

ஒருவ ராகி இருவ ராகி இளமை பெற்ற ஊரிலே அக்க ணிந்து கொன்றை சூடி அம்ப லத்தில் ஆடுவார்

அஞ்செ ழுத்தை ஓதி டில்அ னேக பாவம் அகலுமே.

மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே

மாட மாளி கைப்பு றத்தில் வாழு கின்ற நாளிலே

ஓடி வந்து கால தூதர் சடுதி யாக மோதவே

உடல்கி டந்து யிர்க ழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர் பாடு கின்ற உம்ப ருக்கே ஆடு பாதம் உன்னியே

பழுதி லாத கர்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே நீடு செம்பொன் அம் லத்துள் ஆடு கொண்ட அப்பனே

நீல கண்ட காள கண்ட நித்ய கல்லி யாணனே.

கான மற்ற காட்டகத்தில் வெந்தெ ழுந்த நீறுபோல் ஞான முற்ற நெஞ்சகத்தில் வல்ல தேதும் இல்லையே ஊன மற்ற சோதியோ டுணர்வு சேர்ந்த டக்கினால் தேன கத்தின் ஊறல்போல் தெளிந்த தேசி வாயமே.

பருகி யோடி உம்முளே பறந்து வந்த வெளிதனை நிரவி யேநி னைந்துபார்க்கில் நின்ம லம்ம தாகுமே உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே கருது வீரு மக்குநல்ல கார ணம்ம தாகுமே.

சோதி யாதி யாகிநின்று சுத்த மும்ப லித்துவந்து போதி யாத போதகத்தை ஓது கின்ற பூரணா வீதி யாக ஓடிவந்து விண்ண டியின் ஊடுபோய் ஆதி நாதன் நாதனென் றனந்த காலம் உள்ளதே.

78

79

80

81

82

83