உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

இறைவ னாலெ டுத்தமாடத் தில்லை யம்ப லத்திலே அறிவி னால டுத்தகாயம் அஞ்சி னால மைந்ததே கருவு நாதம் உண்டுபோய்க் கழன்ற வாசல் ஒன்பதும் ஒருவ ராயொ ருவர்கோடி உள்ளு ளேய மர்ந்ததே. நெஞ்சி லேயிருந்திருந்து நெருங்கி யோடும் வாயுவை அன்பி னாலி ருந்துநீர் அருகி ருத்த வல்லிரேல் அன்பர் கோயில் காணலாம் அகலும் எண்தி சைக்குளே தும்பி ஓடி ஓடியே சொல்ல டாசு வாமியே.

தில்லை யைவ ணங்கிநின்ற தெண்ட னிட்ட வாயுவே எல்லை யைக்க டந்துநின்ற ஏக போக மாய்கையே எல்லை யைக்க டந்துநின்ற சொர்க்க லோக வெளியிலே வெள்ளை யுஞ்சி வப்புமாகி மெய்க லந்து நின்றதே. உடம்பு யிர்எ டுத்ததோ உயிரு டம்பெடுத்ததோ உடம்பு யிர்எ டுத்தபோ துருவம் ஏது செப்புவீர் உடம்பு யிர்எ டுத்தபோ துயிரி றப்ப தில்லையே உடம்பு மெய்ம றந்துகண் டுணர்ந்து ஞானம் ஓதுமே.

அவ்வெ னும்மெ ழுத்தினால் அண்ட மேழும் ஆக்கினாய் உவ்வெ னும்மெ ழுத்தினால் உருத்த ரித்து நின்றனை மவ்வெ னும்மெ ழுத்தினால் மயங்கி னார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்த தேசி வாயமே.

மந்தி ரங்கள் உண்டுநீர் மயங்கு கின்ற மானிடீர்! மந்தி ரங்கள் ஆவது மரத்தில் உறல் அன்றுகாண் மந்தி ரங்கள் ஆவது மதர்த்தெ ழுந்த வாயுவே மந்தி ரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே. என்ன வென்று சொல்லுவேன் இலக்க ணம்மி லாததை பன்னு கின்ற செந்தமிழ்ப் பதங்க டந்த பண்பென மின்ன கத்தில் மின்னொடுங்கி மின்ன தான வாறுபோல் என்ன கத்துள் ஈசனும் யானும் அல்ல தில்லையே.

ஆல வித்தில் ஆலொடுங்கி ஆல மான வாறுபோல்

வேரும் வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் ஆரும் வித்தை ஓர்கிலீர் அறிவி லாத மாந்தரே

57

84

85

86

87

88

89

90

பாரும் இத்தை உம்முளே பரப்பி ரம்மம் ஆவிரே.

91