உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

37

இளங்குமரனார் தமிழ்வளம் -37

அவ்வு தித்த மந்திரம் அகார மாயு காரமாய் எவ்வெ ழுத்த றிந்தவர்க் கெழுபி றப்ப திங்கிலை சவ்வு தித்த மந்திரத்தைத் தற்ப ரத்தி ருத்தினால் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்த தேசி வாயமே. நவ்வி ரண்டு காலதாய் நவின்ற மவ்வும் வயிறதாய்ச் சிவ்வி ரண்டு தோளதாய்ச் சிறந்த வவ்வும் வாயதாய் யவ்வி ரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வை யொத்து நின்றதே சிவாய அஞ்செ ழுத்துமே.

இரண்டும் ஒன்றும் மூலமாய் இயங்கு சக்க ரத்துளே சுருண்டு மூன்று வளையமாய்ச் சுணங்கு போல்கி டந்ததீ முரண்டெ ழுந்த சங்கினோசை மூல நாடி ஊடுபோய் அரங்கன் பட்டணத்திலே அமர்ந்த தேசி வாயமே. கடலி லேதி ரியுமாமை கரையில் ஏறி முட்டையிட்டுக் கடலி லேதி ரிந்தபோது ரூப மான வாறுபோல் மடலு ளேயி ருக்குமெங்கள் மணிய ரங்க சோதியை உடலு ளேநி னைத்துநல்ல உண்மை யான துண்மையே.

மூன்று மண்ட லத்தினும் முட்டி நின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெ ழுந்த அட்சரம் ஈன்ற தாயும் அப்பனும் எடுத்து ரைத்த மந்திரம் தோன்றும் ஓரெ ழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே.

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் மூன்று மஞ்செ ழுத்துமாய் முழங்கு மவ்வெ ழுத்துளே ஈன்ற தாயும் அப்பனும் இயங்கு கின்ற நாதமும்

தோன்றும் மண்ட லத்திலே சொல்ல எங்கும் இல்லையே.

சோறு கின்ற பூதம்போல் சுணங்கு போல்கி டந்தநீர் நாறு கின்ற கும்பியில் நயந்தெ ழுந்த மூடரே சீறு கின்ற ஐவரைச் சிணுக்க றுக்க வல்லிரேல் ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே.

வட்ட மென்று நும்முளே மயக்கி விட்ட திவ்வெளி அட்ட அக்க ரத்துளே அடக்க மும்ஒ டுக்கமும் எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்க ரத்துளே எட்டெ லாமு தித்ததே எம்பி ரானை அறிந்தபின்.

92

93

94

95

96

97

98

99