உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

பேசு வானும் ஈசனே பிரம ஞானம் உம்முளே ஆசை யான ஐவரும் அலைத்த லைகள் செய்கிறார் ஆசை யான ஐவரை அடக்கி ஓர்எ ழுத்திலே

59

பேசி டாதி ருப்பிரேல் நாதன் வந்து பேசுமே.

100

நமசி வாய அஞ்செழுத்தும் நல்கு மேல்நி லைகளும்

நமசி வாய அஞ்சிலஞ்சும் புராண மான மாயையும்

நமசி வாய அஞ்செழுத்தும் நம்மு ளேஇ ருக்கவே

நமசி வாய உண்மையை நன்கு ரைசெய் நாதனே.

101

பரமு னக்கே எனக்குவேறு பயமும் இல்லை பராபரா

கரமெ டுத்து நித்தலும் கைகு விக்கக் கடவதும் சிரமு ருகி ஆர்த்தலும் சிவபி ரானே என்னலும் உரமெ னக்கு நீயளித்த ஓம் நமச்சி வாயவே.

பச்சை மண்ப துப்பிலே பழுப்ப தித்த வேட்டுவன் நிச்ச லும்நி னைந்திட நினைந்த வண்ணம் ஆயிடும் பச்சை மண்ணி டிந்துபோய்ப் பறந்த தும்பி ஆயிடும் பித்தர் காள்அ றிந்துகொள்க பிரானி ருந்த கோலமே. ஒளிய தான காசிமீது வந்து தங்கு வோர்க்கெலாம்

102

103

வெளிய தான சோதிமேனி விசுவ நாத னானவன் தெளியு மங்கை யுடனிருந்து செப்பு கின்ற தாரகம்

எளிய தோரி ராமராம ராம இந்த நாமமே.

104

விழியி னோடு புனல்விளைந்த வில்ல வில்லி யோனியும்

வெளியி லேபி தற்றலாம் விளைவு நின்ற தில்லையே

வெளிப ரந்த தேகமும் வெளிக்குள் மூல வித்தையும்

தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்தி ருத்தல் திண்ணமே.

105

ஓம்ந மச்சி வாயமே உணர்ந்து மெய்யு ணர்ந்தபின் ஓம்ந மச்சி வாயமே உணர்ந்துமெய்தெ ளிந்தபின் ஓம்ந மச்சி வாயமே உணர்ந்து மெய்யு ணர்ந்தபின் ஒம்ந மச்சி வாயமே உட்க லந்து நிற்குமே.

அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்த டைத்த வாசலும் சொல்லும் வாசல் ஒரைந்தும் சொம்மி விம்மி நின்றதும் நல்ல வாச லைத்திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனிப்பி றப்ப தில்லையே.

106

107