உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

ஆதி யான தொன்றுமே அநேக அநேக ரூபமாய்ச் சாதி பேத மாய்எழுந்து சர்வ சீவன் ஆனபின் ஆதி யோடி ருந்துமீண் டெழுந்து சென்மம் ஆனபின் சோதி யான ஞானியாகிச் சுத்த மாயிருப்பனே.

108

மலர்ந்த தாது மூலமாய் வைய கம்ம லர்ந்ததும்

மலர்ந்த பூம யக்கம்வந் தடுத்த தும்வி டுத்ததும் புலன்கள் ஐந்தும் பொறிக லங்கி பூமிமேல்வி ழுந்ததும் இலங்க லங்கி நின்றமாயம் என்ன மாயம் ஈசனே.

109

பார டங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும் ஓரி டமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர் ஆரி டமும் இன்றியே அகத்து ளும்பு றத்துளும் சீரி டங்கள் கண்டவன் சிவன்தெ ரிந்த ஞானியே.

மண்கி டார மேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் எண்ப டாத காரியங்கள் இயலும் என்று கூறுறீர் தம்பி ரானை நாள்தோறும் தரையி லேத லைபடக் கும்பி டாத மாந்தரோடு கூடி வாழ்வ தெங்ஙனே. ஞான நிலை

நாவி னூல்அ ழிந்ததும் நலம்குலம்அ ழிந்ததும் மேவு தேர்அ ழிந்ததும் விசார மும்கு றைந்ததும் பாவி காள்இ தென்னமாயம் வா நாடு பூசலாய் ஆவி யார்அ டங்குநாளில் ஐவ ரும்அ டங்குவார்.

இல்லைஇல்லை இல்லையென் றியம்பு கின்ற ஏழைகாள் இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்ன லாகுமோ இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டபேர் இனிப்பி றப்ப தில்லையே.

கார கார காரகார காவல் ஊழி காவலன்

போர போர போரபோர போரில் நின்ற புண்ணியன் மார மார மாரமார மரங்கள் ஏழும் எய்தசீ

ராம ராம ராமராம ராம என்னும் நாமமே.

நீடு பாரி லேபிறந்து நேய மான காயந்தான்

வீடு பேறி தென்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ

110

111

112

113

114