உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

பாடி நாலு வேதமும் பாரி லேப் டர்ந்ததோ நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே.

உயிரு நன்மை யால்உடல் எடுத்து வந்தி ருந்திடும் உயிர்உ டம்பொ ழிந்தபோது ரூப ரூப மாயிடும்

உயிர்சி வத்தின் மாயைஆகி ஒன்றை ஒன்று கொன்றிடும் உயிரும் சத்தி மாயைஆகி ஒன்றை ஒன்று தின்னுமே.

நெட்டெ ழுத்து வட்டமோ நிறைந்த பல்லி யோனியும் நெட்டெ ழுத்தில் வட்டமொன்று நின்ற தொன்றும் கண்டிலேன் குற்றெ ழுத்தில் உற்றதென்று கொம்பு கால்கு றித்திடில் நெட்டெ ழுத்தின் வட்டம்ஒன்றில் நேர்படான்நம் ஈசனே.

விண்ணி லுள்ள தேவர்கள் அறியொ ணாத மெய்ப்பொருள் கண்ணி லாணி யாகவே கலந்து நின்ற தெம்பிரான் மண்ணி லாம்பி றப்பறுத்து மலர டிகள் வைத்தபின் அண்ண லாரும் எம்முளே அமர்ந்து வாழ்வ துண்மையே.

விண்க டந்து நின்றசோதி மேலை வாச லைத்திறந்து கண்க ளிக்க உள்ளுளே கலந்து புக்கி ருந்தபின் மண்பி றந்த மாயமும் மயக்க மும்ம றந்துபோய் எண்க லந்த ஈசனோ டிசைந்தி ருப்ப துண்மையே.

61

115

116

117

118

119

மூல மான மூச்சதில் மூச்ச றிந்து விட்டபின்

நாலு நாளு முன்னிலோரு நாட்ட மாகி நாட்டிடில் பால னாகி நீடலாம் பரப்பி ரம்மம் ஆகலாம்

ஆலம் உண்ட கண்டர்ஆணை அம்மை ஆணை உண்மையே.

120

மின்எ ழுந்து மின்பரந்து மின்ஒ டுங்கு மாறுபோல் என்னுள் நின்ற என்னுள்ஈசன் என்னு ளேஅ டங்குமே, கண்ணுள் நின்ற கண்ணில்நேர்மை கண்அ றிவி லாமையால் என்னுள் நின்ற என்னையன்றி யான்அ றிந்த தில்லையே.

இருக்க லாம்இ ருக்கலாம் அவனி யில்இ ருக்கலாம் அரிக்கு மால்பி ரம்மனும் அகண்டம் ஏழ கற்றலாம் கருக்கொ ளாத குழியிலே காலி டாத கண்ணிலே

121

நெருப்ப றைதி றந்தபின்பு நீயும் நானும் ஈசனே.

122