உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

துறைஅ றிந்து நீர்குளித்தால் அன்று தூமை என்கிறீர் பொறைஇ லாத நீசரோடும் பொருந்து மாற தெங்ஙனே. சத்தம் வந்த வெளியிலே சலமி ருந்து வந்ததும் மத்த மாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே சுத்தம் ஏது கட்டதேது தூய்மை கண்டு நின்றதே பித்தர் காயம் உற்றதேது பேதம் ஏது போதமே.

மாத மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் மாதம் அற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது நாதம் ஏது வேதம்ஏது நற்கு லங்கள் ஏதடா வேதம் ஓதும் வேதியா விளைந்த வாறு பேசடா. தூமை அற்று நின்றலோ சுதீப முற்று நின்றது ஆண்மை அற்று நின்றலோ வழங்க மற்று நின்றது

63

129

130

131

தாண்மை அற்ற ஆண்மைஅற்றுச் சஞ்ச லங்கள் அற்றுநின்ற

தூமை தூமை அற்றகாலம் சொல்லும் அற்று நின்றதே.

132

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை

வேறு பேசி மூடரே விளைந்த வாற தேதடா நாறு கின்ற தூமையல்லோ நற்கு லங்கள் ஆவன சீறு கின்ற மூடனேஅத் தூமை நின்ற கோலமே.

133

தூமை கண்டு நின்றபெண்ணின் தூமை தானும் ஊறியே சீமை எங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந் துலகம் கண்டதே தூமை தானும் ஆசையாய் துறந்தி ருந்த சீவனை தூமை அற்றுக் கொண்டிருந்த தேசம் ஏது தேசமே.

வேணும் வேணும் என்றுநீர் வீண்உ ழன்று தேடுவீர் வேணும் என்று தேடினாலும் உள்ள தல்ல தில்லையே வேணும் என்று தேடுகின்ற வேட்டை யைத்தி றந்தபின் வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே.

சிட்டர் ஓது வேதமும் சிறந்த ஆக மங்களும் நட்ட கார ணங்களும் நவின்ற மெய்மை நூல்களும் கட்டி வைத்த போதகம் கதைக்கு கந்த பித்தெலாம்

134

135

பெட்ட தாய்மு டிந்ததே பிரானை யான்அ றிந்தபின்

136