உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

புலாலு மாய்ப்பி தற்றுமாய்ப் பேரு லாவும் தானுமாய்ப் புலாலி லேமு ளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே. உதிர மான பால்குடித் தொக்க நீர்வ ளர்ந்ததும் இதர மாய்இ ருந்ததொன்றி ரண்டு பட்ட தென்னலாம் மதிர மாக விட்டதேது மாமி சம்பு லால்அதென்று சதிர மாய்வ ளர்ந்ததேது சைவ ரான மூடரே.

உண்ட கல்லை எச்சில்என்று உள்ளெ றிந்து போடுறீர் கண்ட எச்சில் கையலோ கரும னுக்கும் வேறதோ கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பி லாத மூடனே.

ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை

65

144

145

146

ஏது புக்கொ ளித்ததோ எங்கு மாகி நின்றதோ

சோதி புக்கொ ளித்தமாயம் சொல்ல டாசு வாமியே.

ஈனெ ருமை யின்கழுத்தில் இட்ட பொட்ட ணங்கள்போல் மூணு நாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள் மூணு நாலு லோகமும் முடிவி லாத மூர்த்தியை ஊணி ஊணி நீர்முடிந்த உண்மை என்ன உண்மையே. சாவல் நாலு குஞ்சதஞ்சு தாய தான வாறுபோல் காய மான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே கூவ மான கிழநரிக் கூட்டி லேபு குந்தபின் சாவல் நாலு குஞ்சதஞ்சும் தாம்இ றந்து போனவே.

மூல மாம்கு ளத்திலே முளைத்தெ ழுந்த கோரையை கால மேஎ ழுந்திருந்து நாலு கட்ட றுப்பிரேல் பால னாகி வாழலாம் பரப்பி ரம்மம் ஆகலாம் ஆலம் உண்ட கண்டர்பாதம் அம்மை பாதம் உண்மையே. செம்பி னில்க ளிம்புவந்த சீத கங்கள் போலவே அம்பி னில்எ ழுதொணாத அணிய ரங்க சோதியை வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல்க லந்திடச் செம்பி னில்க ளிம்புவிட்ட சேதி ஏது காணுமே.

147

148

149

150

151