உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் 37

நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல் ஓடி ஓடி மீளுவார் உம்மு ளேஅ டங்கிடும் தேடி வந்த காலனும் திகைத்தி ருந்து போய்விடும் கோடி கால மும்உகந் திருந்த வாற தெங்ஙனே.

பிணங்கு கின்ற தேதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே

பிணங்கி லாத பேரொளி பிராண னைஅ றிகிலீர்

152

பிணங்கும் ஓர்இ ருவினைப் பிணக்க றுக்க வல்லிரேல் பிணங்கி லாத பெரியஇன்பம் பெற்றி ருக்க லாகுமே. மீன்இ றைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மீன்இ ருக்கும் நீரலோ மூழ்குவ தும்கு டிப்பதும் மான்இ றைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மான்உ ரித்த தோலலோ மார்பில் நூல்அ ணிவதும். ஆட்டி றைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் ஆட்டி றைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே மாட்டி றைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மாட்டி றைச்சி அல்லவோ மரக்க றிக்கி டுவதே. ஆக்கி டீர்அ னைத்துயிர்க்கும் ஆதி யாகி நிற்பதும் முக்கி டீர்உ மைப்பிடித்து முத்த ரித்து விட்டதும்

மைக்கி டீர்பி றந்துஇறந்து மாண்டு மாண்டு போவதும் ஒக்கி டீர்உ மக்குநான் உணர்த்து வித்த துண்மையே.

ஐயன் வந்து மெய்யகம் புகுந்த வாற தெங்ஙனே செய்ய தெங்கி ளங்குரும்பை நீர்பு குந்த வண்ணமே ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின் வைய கத்தில் மாந்த ரோடு வாய்தி றப்ப தில்லையே. நவ்வு மவ்வை யும்கடந்து நாடொ ணாத சியின்மேல் வவ்வு யவ்வு ளும்சிறந்த வண்மை ஞான போதகம் ஒவ்வு சுத்தி யுள்நிறைந் துச்சி யூடு ருவியே

153

154

155

156

157

இவ்வ கைஅ றிந்தபேர்கள் ஈசன் ஆணை ஈசனே.

158

அக்க ரம்அ னாதியோ ஆத்து மம்அ னாதியோ

புக்கி ருந்த பூதமும் புலன்க ளும்அ னாதியோ

தர்க்க மிக்க நூல்களும் சாத்தி ரம்அ னாதியோ

தற்ப ரத்தை ஊடறுத்த சற்கு ருஅ னாதியோ.

159