உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

தானி ருந்து மூலஅங்கி தணல்எ ழுப்பி வாயுவால் தேனி ருந்து வரைதிறந்து தித்தி ஒன்றும் ஒத்தவே வானி ருந்து மதியமூன்று மண்ட லம்பு குந்தபின் ஊனி ருந்த தளவுகொண்ட யோகி நல்ல யோகியே

69

.175

முத்த னாய்நி னைந்தபோது முடிந்த அண்டத் துச்சிமேல்

பத்த னாரும் அம்மையும் பரிந்த ஆடல் ஆடினார் சித்த ரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பிர்காள் அத்தன் ஆடல் உற்றபோ தடங்கள் ஆடல் உற்றவே.

176

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலக னைத்தும் ஒன்றுமே அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதி யான தொன்றுமே கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால் அன்று தெய்வம் உம்முளே அறிந்த தேசி வாயமே. நட்ட தாவ ரங்களும் நவின்ற சாத்தி ரங்களும் இட்ட மான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும் கட்டி வைத்த புத்தகம் கடும்பி தற்றி தற்கெலாம் பெட்ட தாய்மு டிந்ததே பிரானை யான றியவே. வட்ட மான கூட்டிலே வரைந்தெ ழுந்த அம்புலி சட்டமீப டத்திலே சங்கு சக்க ரங்களாய் விட்ட அஞ்சு வாசலில் கதவி னால்அ டைத்தபின் முட்டை யில்எ ழுந்தசீவன் விட்ட வாற தெங்ஙனே. கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்ற தேதடா வாயி னால்தொ ழுதுநின்ற மந்தி ரங்கள் ஏதடா ஞாய மான பள்ளியில் நன்மை யாக வணங்கினால் காய மான பள்ளியில் காண லாம்இ றையையே.

177

178

179

180

நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்

கொல்லு நாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்டதாய்

வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்

எல்லை ஒத்த சோதியை எட்டு மாற தாகுமே.

181

மனத்த கத்த ழுக்கறாத மவுன ஞான யோகிகள்

வனத்த கத்து இருக்கினும் மனத்த கத்த ழுக்கறார் மனத்த கத்த ழுக்கறுத்த மவுன ஞான யோகிகள் பினத்த டத்தி ருக்கினும் பிறப்ப றுத்தி ருப்பரே.

182