உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

முட்டுக் கண்ட தூமையின் முளைத்தெ ழுந்த சீவனை கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் முட்டும் அற்றுக் கட்டும்அற்று முடியில் நின்ற நாதனை எட்டுத் திக்கும் கையினால் இருந்த வீட தாகுமே.

அருக்க னோடு சோமனும் அதற்கும் அப்பு றத்திலே நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை உருக்கி ஓர்எ ழுத்துளே ஒப்பி லாத வெளியிலே இருக்க வல்ல பேரலோ இனிப்பி றப்ப தில்லையே. மூல வட்டம் மீதிலே முளைத்த அஞ்செ ழுத்தின்மேல் கோல வட்டம் மூன்றுமாய்க் குலைந்த லைந்து நின்றநீர் ஞான வட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ ஏல வட்டம் ஆகியே இருந்த தேசி வாயமே.

சுக்கி லத்தி சையுளே சுரோணி தத்தின் வாசலுள் முச்ச துரம் எட்டுளே மூலா தார அறையிலே அச்ச மற்ற சவ்வுளே அரிஅ ரன்அ யனுமாய் உச்ச ரிக்கும் மந்திரம் உண்மை யேசி வாயமே.

பூவம் நீரும் என்மனம் பொருந்து கோயில் என்உளம் ஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால் மேவு கின்ற ஐவரும் விளங்கு தூப தீபமாய் ஆடு கின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே.

உருக்க லந்த பின்னலோ உன்னை நான்அ றிந்ததும்

71

191

192

193

194

195

இருக்கில் என்ம றக்கில்என் நினைந்தி ருந்த போதெலாம் உருக்க லந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ திருக்க லந்த போதலோ தெளிந்த தேசி வாயமே.

196

சிவாயம் அஞ்செ ழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செ ழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்

சிவாயம் அஞ்செ ழுத்துளே தெளிந்து கொண்ட வான்பொருள் சிவாயம் அஞ்செ ழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே.

பொய்க்கு டத்தில் ஐந்தொதுங்கிப் போகம் வீசு மாறுபோல் இச்ச டமும்இந் திரியமும் நீரு மேல்அ லைந்ததே அக்கு டம்ச லத்தைமொண்டு அமர்ந்தி ருந்த வாறுபோல் இச்ச டம்சி வத்தைமொண் டுகந்த மர்ந்தி ருப்பதே.

197

198