உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

பட்ட முமக யிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வை யாலே பார்த்துநீ படுமுடிச்சுப் போடடா திட்ட வும்ப டாதடா சீவ னைவி டாதடா கட்ட டாநீ சிக்கெனக் களவ றிந்த கள்ளனை.

அல்லி றந்து பகலிறந்து அகம்பி ரமம்இ றந்துபோய் அண்ட ரண்ட மும்கடந்த அனேக னேக ரூபமாய்ச் சொல்லி றந்து மனமிறந்த சுகசொ ரூப உண்மையைச் சொல்லி யாற என்னில்வேறு துணைவ ரில்லை ஆனதே. ஐயி ரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் கையி ரண்டு காலிரண்டு கண்ணி ரண்டும் ஆகியே மெய்தி ரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும் துய்ய காயம் ஆனதும் சொல்லு கின்ற தூமையே. அங்க லிங்க பீடமும் அசவை மூன்றெ ழுத்தினும் சங்க சக்க ரத்திலும் சகல வான கத்தினும் பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும் சிங்க நாத ஓசையும் சிவாயம் அல்ல தில்லையே.

அஞ்செ ழுத்தும் மூன்றெழுத்தும் என்று ரைக்கும் அன்பர்கள் அஞ்செ ழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப்பொருள் அஞ்செ ழுத்து நெஞ்சழுத்தி அவ்வெ ழுத்த றிந்தபின் அஞ்செ ழுத்தும் அவ்வின்வண்ணம் ஆன தேசி வாயமே.

ஆத ரித்த மந்திரம் அமைந்த ஆக மங்களும் மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏது புக்கொ ளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ சோதி புக்கொ ளித்திடம் சொல்ல டாசு வாமியே.

199

200

201

202

203

204

அக்க ரம்அ னாதியோ ஆத்து மாஅ னாதியோ புக்கி ருந்த பூதமும் புலன்க ளும்அ னாதியோ தக்க மிக்க நூல்களும் சதாசி வம்அ னாதியோ

மிக்க வந்த யோகிகாள் விரைந்து ரைக்க வேணுமே.

ஒன்ப தான வாசல்தான் ஒழியு நாள்இ ருக்கையில்

ஒன்ப தாகும் ராமராம ராம என்னும் நாமமே

வன்ம மான பேர்கள்வாக்கில் வந்து நோய்அ டைப்பராம் அன்ப ரான பேர்கள் வாக்கில் ஆய்ந்த மைந்தி ருப்பதே.

205

206