உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

அள்ளி நீரை இட்டதே தங்கை யில்கு ழைத்ததேது மெள்ள வேமி ணமிணென்று விளம்பு கிற்கு மூடர்கள் கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது மெள்ள வேகு ருக்களே விளம்பி டீர்வி ளம்பிடீர்.

அன்னை கர்ப்பத் தூமையில் அவத ரித்த சுக்கிலம் மின்னை யேத ரித்ததும் பனித்து ளிபோ லாகுமே

உன்னி தொக்கு ளழலும் தூமையுள் ளேஅ டங்கிடும் பின்னை யேபி றப்பதும் தூமை காணும் பித்தரே.

அழுக்க றத்தி னங்குளித்த ழுக்க றாத மாந்தரே அழுக்கி ருந்த தெவ்விடம் அழுக்கி லாத தெவ்விடம் அழுக்கி ருந்த அவ்விடத் தழுக்க றுக்க வல்லிரேல்

அழுக்கி லாத சோதியோ டணுகி வாழ லாகுமே.

அனுத்தி ரண்ட கண்டமாய் அனைத்து பல்லி யோனியாய் மனுப்பி றந்தோ திவைத்த நூலி லேம யங்குறீர்

சனிப்ப தேது சாவதேது தாப ரத்தின் ஊடுபோய்

நினைப்ப தேது நிற்பதேது நீர்நி னைந்து பாருமே. ஆதி யாகி அண்டரண்டம் அப்பு றத்தும் அப்புறம் சோதி யாகி நின்றிலங்கு சுருதி நாத சோமனை போதி யாமல் தம்முளே பெற்று ணர்ந்த ஞானிகள் சாதி பேதம் என்பதொன்று சற்று மில்லை இல்லையே.

ஆக்கை மூப்ப தில்லையே ஆதி கார ணத்திலே நாக்கை மூக்கை யுள்மடித்து நாத நாடி யூடுபோய் ஏக்க றுத்தி ரெட்டையும் இறுக்க ழுத்த வல்லிரேல்

73

207

208

209

210

211

பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பி ரம்மம் ஆகுமே.

212

அஞ்சும் அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து ளேஇ ருப்பதும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆத ரிக்க வல்லிரேல்

அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்த தேசி வாயமே.

213

அஞ்செ ழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்ற தேதடா

நெஞ்ச ழுத்தி நின்றுகொண்டு நீசெ பிப்ப தேதடா

அஞ்செ ழுத்தின் வாளதால் அறுப்ப தாவ தேதடா

பிஞ்செ ழுத்தின் நேர்ைைமதான் பிரித்து ரைக்க வேண்டுமே.

214