உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

ஆதி யான அஞ்சிலும் அனாதி யான நாவிலும் சோதி யான மூன்றிலும் சொரூபம் அற்ற ரெண்டிலும் நீதி யான தொன்றிலே நிறைந்து நின்ற வத்துவை ஆதி யான தொன்றுமே அற்ற தஞ்செ ழுத்துமே.

வானி லாத தொன்றுமில்லை வானு மில்லை வானிடில் ஊனி லாத தொன்றுமில்லை ஊனு மில்லை ஊனிடில் நானி லாத தொன்றுமில்லை நானு மில்லை நண்ணிடில் தானி லாத தொன்றுமே தயங்கி ஆடு கின்றதே.

சுழித்த தோர்எ ழுத்தை உன்னிச் சொல்மு கத்தி ருத்தியே

துன்ப இன்ப முங்க டந்து சொல்லும் நாடி யூடுபோய் அழுத்த மான வக்க ரத்தின் அங்கி யைஎ ழுப்பியே

ஆறு பங்க யம்கடந் தப்பு றத்து வெளியிலே விழித்த கண்கு வித்த போத டைந்து போய்எ ழுத்தெலாம் விளைந்து விட்ட இந்திர சால வீட தான வெளியிலே அழுத்தி னாலு மதிம யங்கி அனுப விக்கும் வேளையில்

அவனு முண்டு நானு மில்லை யாரு மில்லை ஆனதே.

நல்ல மஞ்ச னங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர் நல்ல மஞ்ச னங்களுண்டு நாதன் உண்டு நம்முளே எல்லை மஞ்ச னங்கள்தேடி ஏக பூசை பண்ணினால் தில்லை மேவும் சீவனும் சிவப தத்துள் ஆடுமே.

உயிர்அ கத்தில் நின்றிடும் உடம்பெ டுத்த தற்குமுன் உயிர்அ காரம் ஆயிடும் உடல்உ காரம் ஆயிடும் உயிரை யும்உ டம்பையும் ஒன்று விப்ப தச்சிவம் உயிரி னால்உ டம்புதான் எடுத்த வாறு ரைக்கினே.

அண்டம் ஏழும் உழலவே அனந்த யோனி உழலவே பண்டை மாறு மயனுடன் பரந்து நின்றும் உழலவே எண்தி சைக டந்துநின் றிருண்ட சத்தி உழலவே அண்ட ரண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே. உருவ நீரு றுப்புகொண் டுருத்த ரித்து வைத்திடும் பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே

75

223

224

225

226

227

228