உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

கரிய மாலும் அயனுமாகக் காணொ ணாத கடவுளை உரிமை யாக உம்முளே உணர்ந்து ணர்ந்து கொள்ளுமே.

பண்ணி வைத்த கல்லையும் பழம்பொ ருள்அ தென்றுநீர் என்ன முற்றும் என்னபேர் உரைக்கி றீர்கள் ஏழைகாள் பண்ண வும்ப டைக்கவும் படைத்து வைத்த ளிக்கவும் ஒண்ணு மாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே. நால தான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய் ஆல தான வித்துளே அமர்ந்தொ டுங்கு மாறுபோல் சூல தான உற்பனம் சொல்வ தான மந்திரம் மேல தான ஞானிகாள் விரித்து ரைக்க வேணுமே.

அருவ மாய்இ ருந்தபோ தன்னை அங்க நிந்திலை உருவ மாய்இ ருந்தபோ துன்னை நான்அ றிந்தனன் குருவி னால்தெ ளிந்துகொண்டு கோதி லாத ஞானமாம் பருவ மான போதலோ பரப்பி ரம்மம் ஆனதே.

பிறப்ப தும்இறப்பதும் பிறந்தி டாதி ருப்பதும்

மறப்ப தும்நி னைப்பதும் மறைந்த தைத்தெ ளிந்ததும் துறப்ப தும்தொ டுப்பதும் சுகித்து வாரி உண்பதும் பிறப்ப தும்இ றப்பதும் பிறந்த வீட டங்குமே.

கண்ணி லேஇ ருப்பனே கருங்க டல்க டைந்தமால் விண்ணி லேஇ ருப்பனே மேவி அங்கு நிற்பனே தன்னு ளேஇ ருப்பனே தராத லம்ப டைத்தவன் என்னு ளேஇ ருப்பனே எங்கு மாகி நிற்பனே. ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும் கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் சாடி விட்ட குதிரைபோல் தாமே வந்து நிற்குமே. எள்இ ரும்பு கம்பளி இடும்ப ருத்தி வெண்கலம் அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வத்திரம் உள்ளி ருக்கும் வேதியர்க் குற்ற தானம் ஈதிரால்

மெள்ள வந்து நோய்அனைத்து மீண்டி டும்சி வாயமே.

229

230

231

232

233

234

235

236