உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

ஊரி லுள்ள மனிதர்காள் ஒரும னதாய்க் கூடியே தேரி லேவ டத்தைவிட்டுச் செம்பை வைத்தி ழுக்கிறீர் ஆரி னாலும் அறியொ ணாத ஆதி சித்த நாதரைப் பேதை யான மனிதர்பண்ணும் பிரளி பாரும் பாருமே. மருள்பு குந்த சிந்தையால் மயங்கு கின்ற மாந்தரே குருக்கொ டுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் குருக்கொ டுத்த தொண்டரும் குகனோ டிந்த பிள்ளையும் பருத்தி பட்ட பன்னிரண்டு பாடும் தான்ப டுவரே. அன்னை கர்ப்ப அறைஅதற்குள் அங்கி யின்ப்ர காசமாய்

அந்த அறைக்குள் வந்திருந்த தரிய விந்து ரூபமாய் தன்னை ஒத்த நின்றபோது தடைய றுத்து வெளியதாய் தங்க நற்பெ ருமைதந்து தலைவ னாய்வ ளர்ந்ததே உன்னை யற்ப நேரமும் மறந்தி ருக்க லாகுமோ

உள்ள மீது றைந்தெனை மறைப் பிலாத சோதியை பொன்னை வென்ற பேரொளிப் பொருவி லாத ஈசனே

பொன்ன டிப்பி றப்பிலாமை என்று நல்க வேணுமே.

பிடித்த தொண்டும் உம்மதோ பிரம மான பித்தர்காள் தடித்த கோலம் அத்தைவிட்டுச் சாதி பேதங் கொண்மினோ வடித்தி ருந்த தோர்சிவத்தை வாய்மை கூற வல்லிரேல் திடுக்க முற்ற ஈசனைச் சென்று கூட லாகுமே.

சத்தி நீத யவும்நீ தயங்கு சங்கின் ஓசைநீ

77

237

238

239

240

சித்தி நீசி வனும்நீ சிவாய மாம்எ ழுத்துநீ

முத்தி நீமு தலும்நீ மூவ ரான தேவர்நீ

அத்தி றமும் உம்முளே அறிந்து ணர்ந்து கொள்ளுமே.

241

சட்டை யிட்டு மணிதுலக்கும் சாத்தி ரச்ச ழக்கரே

பொத்த கத்தை மெத்தவைத்துப் போத மோதும் பொய்யரே

நிட்டை ஏது ஞானமேது நீரி ருந்த அட்சரம்

பட்டை ஏது சொல்லிரே பாத கக்க பட்டரே.

242

உண்மை யான சுக்கிலம் உபாய மாய்இ ருந்ததும்

வெண்மை யாகி நீரிலே விரைந்து நீர தானதும்