உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

தண்மை யான காயமே தரித்து ரூவம் ஆனதும் தெண்மை யான ஞானிகாள் தெளிந்து ரைக்க வேணுமே. வஞ்ச கப்பி றவ்வியை மனத்து ளேவி ரும்பியே அஞ்செ ழுத்தின் உண்மையை அறிவி லாத மாந்தர்காள் வஞ்ச கப்பி றவியை வதைத்தி டவ்வும் வல்லிரேல்

243

அஞ்செ ழுத்தின் உண்மையை அறிந்து கொள்ள லாகுமே.

244

காயி லாத சோலையில் கனியு கந்த வண்டுகாள்

ஈயி லாத தேனையுண் டிராப்ப கல்உ றங்குறீர் பாயி லாத கப்பலேறி அக்க ரைப்ப டும்முனே வாயி னால்உ ரைப்பதாகு மோன மான ஞானமே.

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்று கின்ற பேயர்காள் பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ காய மான பேயலோ கணக்க றிந்து கொண்டதே.

மூல மண்ட லத்திலே முச்ச துரம் ஆதியாய்

245

246

நாலு வாசல் எம்பிரான் நடுஉ தித்த மந்திரம்

கோலி எட்டி தழுமாய்க் குளிர்ந்த லர்ந்த தீட்டமாய்

மேலும் வேறு காண்கிலேன் விளைந்த தேசி வாயமே.

247

ஆதி கூடு நாடிஓடு காலை மாலை நீரிலே

சோதி மூல மானநாடி சொல்லி றந்த தூவெளி

ஆதி கூரு நெற்பறித் தகார மாதி ஆகமம் பேத பேதம் ஆகியே பிறந்து டல்இ றந்ததே.

248

பாங்கி னோடி ருந்துகொண்டு பரமன் அஞ்செ ழுத்துளே

ஓங்கி நாடி மேல்இருந்த துச்ச ரித்த மந்திரம்

மூங்கில் வெட்டி நார்உரித்து மூச்சில் செய்வி தத்தினில்

ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து ணர்ந்து கொள்ளுமே.

249

புண்ட ரீக மத்தியில் உதித்தெ ழுந்த சோதியை

மண்ட லங்கள் மூன்றினோடு மன்னு கின்ற மாயனை

அண்ட ரண்டம் ஊடறுத் தறிந்து ணர வல்லிரேல்

கண்ட கோயில் தெய்வம்என்று கையெ டுப்ப தில்லையே.

250