உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

அம்ப லங்கள் சந்தியில் ஆடு கின்ற வப்பனே அன்ப னுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே அன்ப ருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே

79

உம்ப ருக்கு முண்மையாய் நின்ற உண்மை உண்மையே.

251

அண்ண லாவ தேதடா அறிந்து ரைத்த மந்திரம்

தண்ண னாக வந்தவன் சகல புராணம் கற்றவன்

கண்ண னாக வந்தவன் கார ணத்து தித்தவன்

ஒண்ண தாவ தேதடா உண்மை யான மந்திரம்.

உள்ள தோபு றம்பதோ உயிர்ஒ டுங்கி நின்றிடம் மெள்ள வந்து கிட்டிநீர் வினவ வேணும் என்கிறீர் உள்ள தும்பு றம்பதும் ஒத்த போது நாதமாம் கள்ள வாச லைத்திறந்து காண வேணும் அப்பனே

ஆர லைந்து பூதமாய் அளவி டாத யோனியும் பார மான தேவரும் பழுதி லாத பாசமும் ஓரொ ணாத அண்டமும் உலோக லோக லோகமும் சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே.

என்ன கத்துள் என்னைநான் எங்கு நாடி ஓடினேன் என்ன கத்துள் என்னை நான் அறிந்தி லாத தாகையால் என்ன கத்துள் என்னைநான் அறிந்து மேதெ ரிந்தபின் என்ன கத்துள் என்னைஅன்றி யாது மொன்றும் இல்லையே

விண்ணி னின்று மின்னெழுந்து மின்னொ டுங்கும் ஆறுபோல் என்னுள் நின்றும் எண்ணும்ஈசன் என்ன கத்தி ருக்கையில் கண்ணி னின்று கண்ணில்தோன்றும் கண்ண றிவி லாமையால், என்னுள் நின்ற என்னையும் யான றிந்த தில்லையே.

அடக்கி னும்அ டக்கொணாத அம்ப லத்தின் ஊடு போய் அடக்கி னும்அ டக்கொணாத அன்பு ருக்கும் ஒன்றுளே கிடக்கி னும்இ ருக்கினும் கிலேசம் வந்தி ருக்கினும் நடக்கி னும்இ டைவிடாத நாத சங்கொ லிக்குமே.

252

.253

254

.255

256

257

மட்டு லாவு தண்துழாய் அலங்க லாய்பு னல்கழல்

விட்டு வீழில் தாகபோக விண்ணில் நண்ணில் வெளியினும்