உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

378

இளங்குமரனார் தமிழ்வளம் -37

எட்டி னோடி ரண்டினும் இதத்தி னால்ம னந்தனைக் கட்டி வீடி லாதுவைத்த காத லின்பம் ஆகுமே.

ஏக முத்தி மூன்றுமுத்தி நாலு முத்தி நன்மைசேர் போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய் நாக முற்ற சயனமாய் நலங்க டல்க டந்ததீ

யாக முற்றி ஆகிநின்ற தென்கொ லாதி தேவனே

258

.259

மூன்று முப்பத் தாறினோடு மூன்று மூன்று மாயமாய் மூன்று முத்தி ஆகிமூன்று மூன்று மூன்று மூன்றுமாய்த் தோன்று சாதி மூன்றதாய் துலக்க மில்வி ளக்கதாய் ஏன்ற னாவின் உள்புகுந்த தென்கொ லோநம் ஈசனே.

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்ல வற்றுள் ஆயுமாய் ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்த னைத்தும் நின்றநீ ஐந்தும் ஐந்தும் ஆயநின்னை யாவர் காண வல்லரே.

ஆறும் ஆறும் ஆறுமாய்ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் ஏறு சீர்இ ரண்டுமூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் வேறு வேறு ஞானமாகி மெய்யி னோடு பொய்யுமாய் ஊறும் ஓசை யாய்அமர்ந்த மாய மாயம் மாயனே.

எட்டும் எட்டும் எட்டுமாய்ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய் எட்டு மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே எட்டு மாய பாதமோ டிறைஞ்சி நின்ற வண்ணமே எட்டெ ழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே. பத்தி னோடு பத்துமாய்ஓர் ஏழி னோடும் ஒன்பதாய் நத்து நாற்றி சைக்குநின்ற நாடு பெற்ற நன்மையாய் அத்து மாய கொத்தமோடும் அத்த லமிக் காதிமால் பத்தர் கட்க லாதுமுத்தி முத்தி முத்தி யாகுமே.

வாசி யாகி நேசமொன்று வந்தெ திர்ந்த தென்னுக நேச மாக நாளுலாவ நன்மை சேர்ப வங்களில் வீசி மேல்நி மிர்ந்ததோளு மில்லை யாக்கி னாய்கழல் ஆசை யால்ம றக்கலா தமரர் ஆகல் ஆகுமே.

260

261

262

263

264

265