உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

எளிய தான காயமீதும் எம்பி ரான்இ ருப்பிடம் அளிவு றாது நின்றதே அகார மும்உ காரமும் கொளுகை யான சோதியும் குலாவி நின்ற தவ்விடம் வெளிய தாகும் ஒன்றிலே விளைந்த தேசி வாயமே.

அஞ்செ ழுத்தும் மூன்றெழுத்தும் என்று ரைக்கும் அன்பர்காள் அஞ்செ ழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப்பொருள் அஞ்செ ழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெ ழுத்த றிந்தபின் அஞ்செ ழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வு மாம்சி வாயமே. பொய்யு ரைக்கப் போதமென்று பொய்ய ருக்கி ருக்கையால் மெய்யு ரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கி லாமையால் வைய கத்தில் உண்மைதன்னை வாய்தி றக்க அஞ்சினேன் நைய வைத்த தென்கொலோ நமசி வாய நாதனே. ஒன்றை ஒன்று கொன்றுகூட உணவு செய்தி ருக்கினும் மன்றி னூடு பொய்களவு மாறு வேறு செய்யினும் பன்றி தேடும் ஈசனைப் பரிந்து கூட வல்லிரேல்

81

266

267

268

அன்று தேவர் உம்முளே அறிந்து ணர்ந்து கொள்ளுமே.

269

மச்ச கத்து ளேஇவர்ந்து மாயை பேசும் வாயுவை அச்ச கத்து ளேயிருந் தறிவு ணர்த்திக் கொள்விரேல் அச்ச கத்து ளேயிருந் தறிவு ணர்த்திக் கொண்டபின் இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே.

வயலி லேமு ளைத்த செந்நெல் களைய தான வாறுபோல் உலகி னோரும் வன்மைகூறில் உய்யு மாற தெங்ஙனே விரகி லேமு ளைத்தெழுந்த மெய்ய லாது பொய்யதாய் நரகி லேபி றந்திருந்து நாடு பட்ட பாடதே.

ஆடு கின்ற எம்பிரானை அங்கு மிங்கும் என்றுநீர் தேடு கின்ற பாவிகாள் தெளிந்த தொன்றை ஓர்கிலீர்

270

271

காடு நாடு வீடுவீண் கலந்து நின்ற கள்வனை

நாடி ஓடி உம்முளே நயந்து ணர்ந்து பாருமே.

ஆடு கின்ற அண்டர்கூடும் அப்பு றம்ம திப்புறம்

தேடு நாலு வேதமும் தேவ ரான மூவரும்

நீடு வாழி பூதமும் நின்ற தோர்நி லைகளும்

272

ஆடு வாழின் ஒழியலா தனைத்தும் இல்லை இல்லையே

.273