உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

ஆவ தும்ப ரத்துளே அழிவ தும்ப ரத்துளே போவ தும்ப ரத்துளே புகுவ தும்ப ரத்துளே தேவ ரும்ப ரத்துளே திசைக ளும்ப ரத்துளே யாவ ரும்ப ரத்துளே யானும் அப்ப ரத்துளே.

274

ஏழு பாரும் எழுகடல் இபங்கள் எட்டு வெற்புடன் சூழு வான்கி ரிகடந்து சொல்லும் ஏழு உலகமும்

ஆழி மால் விசும்புகொள் பிரமாண் டரண்ட அண்டமும் ஊழி யான்ஒ ளிக்குளே உதித்து டன்ஒ டுங்குமே.

கயத்து நீர்இ றைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்

மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதிஇ லாத மாந்தர்காள்

அகத்துள் ஈரங் கொண்டுநீர் அழுக்க றுக்க வல்லிரேல் நினைத்தி ருந்த சோதியும் நீயும் நானும் ஒன்றலோ.

நீரி லேபி றந்திருந்து நீர்ச டங்கு செய்கிறீர்

275

276

ஆசை உன்னி நீரெலாம் அவத்தி லேஇ றைக்கிறீர்

வேரை உன்னி வித்தைஉன்னி வித்தி லேமு ளைத்தெழும்

சீரை உன்ன வல்லிரேல் சிவப தம்அ டைவிரே.

277

பத்தொ டுற்ற வாசலில் பரந்து மூல வக்கர முத்தி சித்தி தொந்தமென் றியங்கு கின்ற மூலமே மத்த சித்த ஐம்புலன் மகார மான கூத்தையே அத்தி யூரர் தம்முளே அமைந்த தேசி வாயமே.

அணுவி னோடும் அண்டமாய் அளவி டாத சோதியை குணம தாகி உம்முளே குறித்தி ருக்கில் முத்தியாம் முணமு ணென்றே உம்முளே விரலை ஒன்றி மீளவும் தினந்தி னம்ம யக்குவீர் செம்பு பூசை பண்ணியே.

மூல மான அக்கரம் முகப்ப தற்கு முன்னெலாம் மூட மாக மூடுகின்ற மூட மேது மூடரே கால னான அஞ்சுபூதம் அஞ்சி லேஒ டுங்கினால் ஆதி யோடு கூடுமோ அனாதி யோடு கூடுமோ.

முச்ச துர மூலமாகி முடிவு மாகி ஏகமாய் அச்ச துரம் ஆகியே அடங்கி யோர்எ ழுத்துமாய் மெய்ச்ச துர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் உச்ச ரிக்கும் மந்திரத்தின் உண்மை யேசி வாயமே.

278

279

280

281