உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

வண்ட லங்கள் போலும்நீர் மனத்து மாச றுக்கிலீர் குண்ட ரங்கள் போலும்நீர் குளத்தி லேமு ழுகுறீர் பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடிக் காண்கிலான் கண்டி ருக்கும் உம்முளே கலந்தி ருப்பர் காண்மினே.

நின்ற தன்றி ருந்ததன்று நேரி தன்று கூரிதன்று பந்த மன்று வீடுமன்று பாவ கங்கள் அற்றது கெந்த மன்று கேள்வியன்று கேடி லாத வானிலே அந்த மின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே. பொருது நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் எருதி ரண்டு கன்றைஈன்ற ஏக மொன்றை ஓர்கிலீர் அருகி ருந்து சாவுகின்ற யாவை யும்அ றிந்திலீர் குருவி ருந்து லாவுகின்ற கோலம் என்ன கோலமே. அம்ப ரத்துள் ஆடுகின்ற அஞ்செ ழுத்து நீயலோ சிம்பு ளாய்ப்ப ரந்துநின்ற சிற்ப ரமும் நீயலோ எம்பி ரானும் எவ்வுயிர்க்கும் ஏக போகம் ஆதலால் எப்பி ரானும் நானுமாய் இருந்த தேசி வாயமே.

ஈரொ ளிய திங்களே இயங்கி நின்ற தற்பரம் பேரொ ளிய திங்களே யாவ ரும்மஃ தறிகிலீர் காரொ ளிய படலமும் கடந்து போன தற்பரம் பேரொ ளிய பெரும்பதம் ஏக நாத பாதமே.

83

282

283

284

285

286

கொள்ளொ ணாது மெல்லொ ணாது கோத றக்கு தட்டொணா தள்ளொ ணாத ணுகொணா தாக லான்ம னத்துளே தெள்ளொ ணாது தெளியொணாது சிற்ப ரத்தின் உட்பயன் விள்ளொணாத பொருளைநான் விளம்பு மாற தெங்ஙனே.

287

வாக்கி னால்ம னத்தினால் மதித்த கார ணத்தினால்,

நோக்கொ ணாத நோக்கையுன்னி நோக்கை யாவர் நோக்குவார், நோக்கொ ணாத நோக்குவந்து நோக்க நோக்க நோக்கிடில்,

நோக்கொ ணாத நோக்குவந்து நோக்கை எங்கண் நோக்குமே.

288

உள்ளி னும்பு றம்பினும் உலகம் எங்க ணும்பரந் தெள்ளில் எண்ணெய் போலநின் றியங்கு கின்ற எம்பிரான் மெள்ள வந்தென் னுட்புகுந்து மெய்த்த வம்பு ரிந்தபின்

வள்ள லென்ன வள்ளலுக்கு வண்ண மென்ன வண்ணமே.

289