உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

48. பயங்காட்டினால் அஞ்சும் பைங்கொடி கார்கண்ட தலைவன் பாகனொடு பகரல் கட்டளைக் கலித்துறை

அயங்காட் டியமறை யார்விடை யாளர் அருணைவெற்பிற் புயங்காட் டியமணித் தேர்வல வா!முன்பு போனகொண்டல் சயங்காட்டிக் கோபமும் சாபமும் காட்டித் தடித்திடித்துப் பயங்காட்டி னாலஞ்சு மேதனி யேநின்ற பைங்கொடியே.

115

(பொ-ரை) குதிரைகளாகக் காட்டிய மறையினையுடை யவரும், இடபக் கொடியுடையவரும் ஆகிய இறைவரின் அண்ணாமலை போன்ற தோள்வலி காட்டிய அழகிய தேர்ப்பாகனே, முன்னே போன மழை மேகம் திரண்டு காட்டி இந்திர கோபப் பூச்சியையும் திருவில்லையும் உண்டாக்கி வன்மையாய் இடித்து அச்சமூட்டினால் தனியே நின்ற பசுமையான பூங்கொடி போன்ற தலைவி அஞ்சுவள் (ஆகலின் தேரை விரைந்து செலுத்துக).

(வி-ரை) கொண்டலின் செயலைக் கூறுமுகத்தால் தலைவி அஞ்சுதற்கு அடியான அச்சக்குறிப்புச் சொற்களைப் பெய்துள்ளமை அறிக. சயம் என்பது கூட்டம், கொடுமை என்னும் இரு பொருளையும், கோபம் என்பது இந்திரகோபம், சினம் என்னும் இருபொருளையும், சாபம் என்பது வில், சபித்தல் என்னும் இருபொருளையும், தடித்திடித்து என்பது மின்னி இடித்தல், வன்மையாய் இடித்தல் என்னும் இரு பொருளையும் தந்து நிற்றல் அறிக. (48)

49. அருணைச் சரபம்

நேரிசை வெண்பா

பைங்கண் புலிக்குப் பரிபவத்தைக் காட்டிநர சிங்கத் தினையடர்த்துச் சீறியே - வெங்கைப் புழைக்குஞ் சரமுரித்துப் போர்த்த தருணைக்கே தழைக்குஞ் சரபமொன்று தான்.

(பொ-ரை) திருவருணைப் பதியில் சிறந்து விளங்கும் எண்கால் புள் ஒன்றுதான். பசுமையான கண்ணையுடைய புலிக்குத் துன்ப முண்டாக்கி நரசிங்கத்தினை வருத்தி, மிகச் சீற்றத்துடன் கொடிய துளைக்கை யானைத் தோலை உரித்துப் போர்த்தது.