உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(வி-ரை) அருணை இறைவராகிய சிவபெருமானார் செயல்களைச் சரபப்புள் செயலொடும் இணைத்துக் கூறினார், சரபமாக வந்தவரும் அவரே ஆகலின். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை இடையில் உடுத்துக் கொண்டமையால் 'புலிக்கும் பரிபவத்தை உண்டாக்கி' என்றார். இரணியனைக் கொன்ற நரசிங்கப் பெருமாள் செருக்குற்றமையால் அவரைச் சிவனார் அழித்தமையை 'நரசிங்கத்தினை அடர்த்து' என்றார். சரபம் என்பது எட்டுக் காலும் இரண்டு தலையும் உடைய புள் என்பர். (49)

50. நீறு கொண்டு நெற்றியில் எழுதும்

குறம்

பதினான்குசீர் ஆசிரியவிருத்தம்

ஒன்றும் மூன்றும் நாமு ரைக்க வந்து கேளும் அரிவைமீர்! உதய மான சுளகு நெல்லும் ஒற்றை பட்ட தாதலால், கன்று மானும் மழுவு மாக ஒருவர் வந்து தோன்றினார்; கண்ட மட்டி லேக றுப்பர், கைக்க பாலர், அவரையும் சென்று நாடில் அருணை மீது காண லாகும்; நாமமும்

தேவ ராயர்; அவர லாது தெய்வம் வேறு கண்டிலேம்; நின்று வாடும் இவள்தன் ஆசை இடர்த விர்ப்ப ராதலான்,

நீறு கொண்டு மூன்றி ரேகை நெற்றி மீதில் எழுதுமே.

(பொ-ரை) பெண்களே, நாம் குறி கூறுவதை வந்து கேட்பீர்களாக! எடுத்துக்கொண்டு வந்த சுளகில் உள்ள நெல்லும், ஒன்றாகவும் மூன்றாகவும் எண்ணும்போது ஒற்றைபட இருந்தது. ஆதலால்,மான்கன்றும் மழுப்படையுமாக ஒருவர் வந்து தோன்றினார். அவர் கழுத்தளவில் கறுப்பு உடையவர்; கையில் தலையோடு உடையவர்; அவரை அமடய விரும்பினால் திருவருணைப்பதியில் போய்ப் பார்க்கலாம்; அவர் பெயரும் தேவராயர் என்பதாம்; அவரை அல்லாமல் வேறு தெய்வத்தைக் காணேம்; நின்று வாட்டமுறுகின்ற இவள் தன் ஆசைத்துயரை அகற்றுவர்; ஆதலால் இவள் நெற்றியின் மேல் திருநீற்றினால் மூன்று கோடு அணியுங்கள்.

(வி-ரை). தலைவி தலைவனைக் கண்டு மையலுற்று மயங்கினாளாக ஆங்கு வந்த குறத்தியைக் குறிவினவ அவள் குறிதேர்ந்து கூறுவதாகச் செய்யுள் செய்வது குறம் ஆகும்.