உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் ணைக் கலம்பகம்

117

அவள் சுளகில் நெல்லையிட்டு அதனை மூன்று கூறாக்கி ஒரு கூற்றை எண்ணுவள். அஃது ஒற்றைப்படுமாயின் நன்மையும், இரட்டைப்படுமாயின் நன்மை இன்மையும் சுட்டுவாள். சுளகில் இட்ட நெல்லையள்ளிக் கீழிட்டால் கையில் ஒட்டியுள்ள நெல்லை எண்ணி ஒற்றை இரட்டை காண்பதும் உண்டு; 'கண்ட மட்டில் கறுப்பர்' என்பது 'பார்த்த அளவானே கோபம் கொள்வர்' என்னும் குறிப்புப் பொருளும் தந்தது அறிக. (50)

51. எந்த உதவி கொண்டு பகை வெல்லும்? தோழி தலைவனை வேண்டல் பதினான்குசீர் ஆசிரியவிருத்தம்

நெற்றி மீது கண்ப டைத்த உம்மை மாரன் எய்வனோ? நீர ணிந்த அரவிருக்க நெடிய தென்றல் முடுகுமோ? வெற்றி யான தாளி ருக்க மதியம் உம்மை நலியுமோ?

விரவு கங்குல் உமது கண்ணின் வெயிலின் முன்பு நிற்குமோ? கற்றை யான குழலி எந்த உதவி கொண்டு பகைவெலும்

கருணை கூர்தென் அருணை மேவு கலியு கத்து மெய்யரே, செற்ற லார்கள் புரமெ ரித்த புழுக ணிப்ர தாபரே,

தேவ ராய ரேசு கந்த தினவ சந்த ராயரே.

(பொ-ரை) திருவருட்

பெருக்குடைய

அழகிய திருவண்ணாமலையில் உறையும் கலிகாலக் கடவுளே, பகைவர் களின் முப்புரங்களை எரித்த புழுகு அணிந்த வீரரே, தேவர் தேவரே, நாளும் நறுமணம் பரப்பும் வசந்தராயரே, நெற்றிக் கண்ணைப் படைத்த உம்மீது மன்மதன் மலர்க்கணை ஏவுவனோ? நீவிர் அணிகலமாகக் கொண்ட பாம்பு இருக்கும்போது நும்மை நெடிய தென்றற்காற்று விரைவாக வந்து துன்புறுத்துமோ? வெற்றிதரும் திருத்தாள்கள் இருக்கும்போது உம்மை நிலவு வாட்டுமோ? இருள் செறிந்த இரவுப்பொழுது நும் கண்ணாகிய கதிரோன் முன்னே நிற்குமோ? நீவிர் இவ்வாறு வலியராகத், திரண்ட கூந்தலையுடைய இத் தலைவி எவ்வுதவி கொண்டு மேற்கூறிய பகைகளை வெற்றிகொள்வாள்?

(வி-ரை) மன்மதன், தென்றல்,மதி, கங்குல் என்பவை பிரிந்தாரை வருத்தும் தன்மையன. அவை தலைவராகிய நும்மை வருத்தமாட்டா. ஆனால் இவள் யாது செய்வள் என்று தோழி தலைவரை இரந்து நின்றாள். 'பிரியாதுறைக' என்பது அவள்