உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

வேண்டுதலாம். 'கலியுகத்து மெய்யர்' 'புழுகணிப் பிரதாபர்' 'தேவராயர்' 'வசந்தராயர்' என்பவை அண்ணமலையாரின் பெயர்கள்.

இறைவன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்டவன் மாரன்; ஆதலால் எய்யான். வாதாசனன் (காற்றை உண்பது) என்னும் பெயருடையது பாம்பு; அதனை அணிந்தவர் ஆதலால் வாதம் (காற்று) வருத்தாது; இறைவன் தக்கனுடைய வேள்விக்குச் சென்றிருந்த மதியத்தைக் காலால் உதைத்துத் தேய்த்தவன் ஆகலின் அதுவும் வருத்தாது; கதிரோன் முன் காரிருள் நில்லாது ஆகலின் கதிரோனைக் கண்ணாகக் கொண்ட இறைவனை ருள் வருத்தாது எனக் காரணம் காட்டினாள். இவற்றை வெல்லும் ஆற்றல் இல்லாத தலைவியின் நிலைமை யாதாம்? நீர் அருள்வீராக என்றாறாம்.

52. சரற் காலமே, காலம்

கார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தினைப்போது தானே நினைத்தாலும் மேலோர்

சிறப்பான பேறீகுவோர்

வனத்தாடு சோணா சலத்தூடு தீரா

மயிற்பேடை காள்! ஓடைகாள்!

வினைப்பாவி யானேன் விழிப்பாயு நீரான்

மிகுத்தேறு கார்காலமே

தனித்தாவி சோர்வார் தமக்கா லமேநீள்

சரற்கால மேகாலமே!

(51)

(பொ-ரை) அண்ணாமலையின் ஊடே அமைந்த காட்டின் கண் களிப்புற ஆடுகின்ற நீங்காத பெண்மயில்களே, நீர்நிலைகளே, அடியார் மிகச் சிறியபொழுதே நினைத்தாலும் சிறந்த பேற்றை அருள்வார்; எனினும் யான் தீவினையாட்டியானேன்; இல்லை யேல், என் விழியினின்று ஒழுகும் நீரால் மிகுந்து எழும்பும் கார்காலமே, தலைவரைப் பிரிந்து தனியே இருந்து, உயிர் சோர்பவர்க்கு நஞ்சென ஆகுமோ? துயர் நீளச் செய்யும் கார்காலமே வாழ்வின் இறுதிக்காலமே போலும்!