உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

119

(வி-ரை) தினைப்போது நினைவார்க்கும் பேறு ஈயும் பெறுமான், நினைந்துருகி நீர்வழிய நிற்கும் எனக்கு அருளாரோ? என இரங்கி உரைத்தாள் தலைவி. கார்காலப் பொலிவைக் களிமயிலும் கானோடையும் காட்டின; அக்காலத்து அவர் வாராமையால் எனக்கு ஆலகாலமும், கடைசி நாளும் ஆயின என்றாள். சரற்காலம் -கார்காலம் ; காலம் - இறுதிக்காலம்.(52) 53. இன்னமும் வந்திலர் கேள்வர் இளவேனில்

நேரிசை ஆசிரியப்பா

காலையும் மாலையும் கைமலர் குவித்து மாலும் அயனும் வணங்குதற்(கு) அரியோன் இமைக்குமுன் உலகம் யாவையும் படைத்தோன் தனக்கொரு தாயும் தந்தையும் இல்லோன் பழவினைக் கயிற்றிற் பல்லுயிர்ப் பாவை அழகுற நடிக்கத் திருநடம் புரிவோன் வினைவலை அறுக்கும் மெய்த்தவ வேடன் மனவலைப் பிணிக்கம் மான்மத நாதன் பேறாம் அறுபத் தாறா யிரம்பொன் மாறாத் தியாகன் வசந்த விநோதன் அண்ணா மலையன் அதிருங் கழலன் கண்ணார் அமுதன் கைலைப் பொருப்பின் மறலித் திசையின் மலையா சலமென இருத்திய துருத்திகொண் டிளங்கால் பரப்பிக் காவுலைப் பல்லவக் கனல்நா அசைப்பக் குறைவறு குயில்வாய்க் குறட்டினில் அடக்கிப்

பொறிதிகழ் அரிக்கரி யதனிடைச் சொரிந்துள்

இசைத்திடு மஞ்சரிப் பசைக்கோல் அசைத்து

மதவீ ரனுக்கு வசந்தக் கருமான்

பனிமலர்ச் சாயகம் பண்ணி நீட்டினன்

இன்னமும் வந்திலர் கேள்வர்

புன்னையங் கருங்குழல் அன்னமென் நடையே.