உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

121

குறடுபற்றுக்குறடு; பல்லவம் -தளிர்; பொறி - புள்ளி; அரி - வண்டு; மஞ்சரி - பூங்கொத்து; கருமான் - கொல்லன்; சாயகம் -

அம்பு.

தியாகன்,

வசந்தவிநோதன்,

அண்ணாமலையன்,

அதிருங்கழலன், கண்ணார் அமுதன் என்பவை இறைவன் பெயர்கள்.

54. அருணைப்பதியார் கருணைப்பதியார் எண்சீர் ஆசிரியவிருத்தம்

அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரும் அடிமாற நடித்தாரும் முடிமாறன் அடித்தாரும் முன்னுமற மொழிந்தாரும் பின்னுமறம் ஒழிந்தாரும் உகைத்திடுமான் ஏற்றாரும் மிகைத்திடுமான் ஏற்றாரும் என்னகத்தாம் உரியாரும் கொன்னகத்தாம் உரியாரும் எருக்கிதழி மணத்தாரும் முருக்கிதழி மணத்தாரும் வன்னிவடி வனத்தாரும் சென்னிவடி வனத்தாரும்

வருகருணைப் பதியாரும் பெருகருணைப் பதியாரே.

(53)

(பொ-ரை) தம்மை வேறுபடுத்துகின்ற குற்றம் இல்லாத வரும், பின்னப்பெற்ற பெரிய சடையை யுடையவரும், கால்மாறி நடித்தவரும், முடிசூடிய வேந்தன் பாண்டியனால் அடிபட்ட வரும், நினைக்கத்தக்க அறங்களை உரைத்தவரும், பிணக்குச் செய்யும் மறச்செயல்களை நீங்கியவரும், செலுத்தும் இடப் ஊர்தியை யுடையவரும், மேலெழுந்து வந்த மானைக் கையில் ஏற்றவரும், என் உள்ளத்தே உறைபவரும், கொல்லும் யானையின் தோலை உடையவரும், எருக்கு, கொன்றை ஆகிய மலர்களின் மணம் உடையவரும், முண்முருக்கு இதழ் போன்ற, இதழை உடைய உமையை மணந்தவரும், நெருப்பு வடிவத்தில் அன்னம் போன்ற உமையைப் பாகம் கொண்டவரும், தலையினின் று வழியும் கங்கை நீரை யுடையவரும், பெருகிவரும் அருளுக்கு இடமாய் இருப்பவரும் புகழ்மிக்க அருணைப்பதியில் இருக்கும் அண்ணாமலையாரே ஆவர்.

(வி-ரை) அன்னிய மாசடையார் -அன்னிய மாசு அடையார்; அடிமாற நடித்தார் என்றது கால்மாறி ஆடிய திருவிளை யாடலை. அது திருவிளையாடற் புராணத்துக் கண்டது. முடிமாறன் அடித்தது என்றது மாணிக்கவாசகர்க்காக மண்சுமந்து