உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் -38

அரிமர்த்தன பாண்டியனால் பிரம்படிபட்டது; அது திருவிளை யாடலில் மண்சுமந்த படலத்தில் கண்டது. முன்னும் நினைக்கும்; பின்னுமற மொழிந்தார் - பின்னும் மறம் ஒழிந்தார்; பின்னுதல் - பிணைத்தல், துன்புறுத்தல், என் அகத்து ஆம், கொல் நகத்து ஆம் இவற்றுள் 'ஆம்' அசைநிலை. நகம் - யானை. உரி - தோல்; இதழி - கொன்றையும், இதழையுடைய உமையும், வன்னி தீ; வனம் -நீர்.

மடக்கு என்னும் சொல்லணி அமைந்துள்ளது.

இச்செய்யுளில்

(54)

55. செய்யாதன வெல்லாம் செய்வோம்

சம்பிரதம்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

பரவைபொ ருக்கெழவும் ககனம்வ டுப்படவும் பரிதிவ டக்கெழவும் நிருதிகு ணக்குறவும் இரவுப கற்படவும் பகலிர வொத்திடவும்

எளிதின்இ யற்றிடுவோம் இவைசில வித்தைகளோ

அரவம ணிப்பணியான் அனலகி ரிப்பெருமான்

அருணகி ரிக்கிணையா அவனித லத்திடையே

கருதிம னத்திலே சிறிதுநி னைத்தளவே

கதியைய ளித்திடுமோர் பதியுமு ணர்த்துவமே.

(பொ-ரை) கடல் காய்ந்து பொருக்குத் தோன்றவும், விண்ணில் தழும்பு தோன்றவும், கதிரோன் வடக்குத்திசையில் தோன்றவும், எண்திக்குக் காவலருள் ஒருவனான நிருதி என்பான் கிழக்குத்திசையில் சேரவும், இரவுப்பொழுது பகற் பொழுதாகவும், பகற்பொழுது இரவுப் பொழுதுக்கு ஒப்பாக அமையவும் எளிமையாகச் செய்வோம்; யாம் செய்தற்கு உரிய சில வித்தைகள் இவைதாமோ? பாம்பை அழகிய அணிகலமாக உடையவனும், தீப்பிழம்பாகத் தோன்றிய அண்ணாமலையாரது திருவண்ணா மலைக்கு இணையாகச் சிறிதளவே மனத்தில் எண்ணி நினைத்த பொழுதிலேயே வீடுபேற்றை அளிக்கக்கூடிய ஒரு பகுதியையும் இந் நிலத்தில் தெரிவிப்போம்!

(வி-ரை) சம்பிரதம் என்பது மாயவித்தை வல்லவர் தம் செயல் வன்மையைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யுள்