உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

சலமிகு முற்பலமே தளவர்வது முற்பலமே

சருவும னத்திடரே தழுவும னத்திடரே இலைநெரி சற்பனையே இவருரை சற்பனையே

இனியப னித்திரையே இனியிலை நித்திரையே

139

(பொ-ரை) கொன்றை மலர் மாலையையும், பால் வெண்மதியையும் அணியும் சிறந்தவரும், மலைமகளின் இனிய மணவாளரும் ஆகிய அண்ணாமலையாரின் அருணைப் பதியைச் சூழ விளங்கும் இடத்திலுள்ள உப்பங்கழிகளே, எனக்கு நேர்வன எல்லாம் துன்பத்தாற் கலங்குதலேயாம்; குறவை மீனின் இனத்தைச் சேர்ந்த கயல்மீன்களே, எனக்கு உறவினரும் அயலார் போல ஆயினர்; நீரில் செழித்து விளங்கும் நீலோற்பல மலர்களே, யான் தளர்ச்சியுறுவதும் முன் செய்த வினையின் பயனே; விரும்பிச் சேரும் அன்னங்கள் உலாவும் மணல் திடர்களே, என் மனத்தில் துன்பமே தழுவிக் கிடக்கும்; ஓலைகள் நெருங்கிக் கிடக்கும் பனைமரமே, என் தலைவராகிய இவர் உரை வஞ்சனையே யாம்; இன்பந்தரும் தண்மையான அலையே, இனி எனக்கு உறக்கம் என்பது இல்லையேயாம்.

(வி-ரை) தலைவனைப் பிரிந்த தலைவி கழி, கயல், நீலோற்பலம், மணல்திடர், பனை, திரை ஆகியவற்றை விளித்துத் தன் இரங்குதல் உரைத்தது இது. இப்பாடலின் இரண்டாம்

அடியை,

'குலவும் இடம் கழியே, பலவும் இடக்கு அழியே குறவை இனக் கயலே, உறவும் எனக்கு அயலே'

எனவும், மூன்றாம் அடியை,

'சலம் மிகும் உற்பலமே, தளர்வது முற் பலமேட சருவும் அனத் திடரே, தழுவும் மனத்து இடரே' எனவும், ஈற்றடியை,

'இலை நெரிசல் பனையே, இவர் உரை சற்பனையே இனிய பனித் திரையே, இனி இலை நித்திரையே’

எனவும் பிரித்துப் பொருள் கொள்க.

கழி - உப்பங்கழி; இடக்கு - துன்பம்; அழி - கலக்கம்; சலம் - நீர்; உற்பலம் -நீலோற்பலம் (குவளை); முற்பலம் - முன்வினைப்

  • தொடையார்