உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

பயன்; சருவும் - சேரும்; அனம்

அன்னம்; இலை

ஓலை;

சற்பனை - வஞ்சம்; இலை - இல்லை.

முதலடி

ஒழிந்த

மூன்றடிகளிலும்

மடக்கணி

அமைந்துள்ளது.

(74)

75. வஞ்சி நின்ற இடம் இவ்விடம் சுவடுகண் டறிதல்

எழுசீர் ஆசிரியவிருத்தம்

நித்தன் நம்பனரு ணாசலத் திருவை

நின்று தேடியுழல் நெஞ்சமே

இத்த டஞ்சுரம டங்கவே யிதல

தில்லை வேறுமர மிதனிடை

அத்தி நின்றவிட மவ்விடம்; சிலைகொள்

அரசு நின்றவிடம் உவ்விடம்;

எய்த்துள் அஞ்சியிள வஞ்சிநின் றவிடம் இவ்வி டஞ்சுவடு மேவுமே.

(பொ-ரை) நிலை பெற்ற சிவபெருமானது அண்ணாமலைப் பதியில் உள்ள திருமகள் போன்றவனைத் தேடி நின்று வருந்து கின்ற மனமே, இப் பெரிய பாலைநிலம் முழுவதும் இம் மரம் அல்லது வேறு மரம் இல்லை; இம் மரத்தின் இடத்தில் யானை நின்ற இடம் அந்த இடமாகும்; வில்லேந்திய தலைவன் நின்ற இடம் இடைப்பட்ட உவ்விடமாகும்; இளைத்து உள்ளம் நடுங்கி, இளைய வஞ்சிக்கொடி போன்ற தலைவி நின்ற இடம் இவ்விட மாகும்; அங்கும் உங்கும் இங்கும் சுவடுகள் பொருந்திக் கிடக்கின்றன. பெரிய பாலை ; அடங்கவே முழுமையாக; அத்தி யானை; அரசு அரசனைப் போன்ற தலைவன்; உவ்விடம் என்றது இவ்விடமும் அவ்விடமுமல்லாத நடுப்பட்ட இடம். தலைவியின் சுவடுபட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டு செவிலி உரைத்தாள் ஆகலின் அதனை ‘இவ்விடம்' என்றாள். சுவடு கால் தடம்.

(வி-ரை) தடஞ்சுரம்

-

-

தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிச்சென்ற செவிலி பாலை வழியில் அவர்கள் சென்றதும் நின்றதுமாகிய கால்தடங்களைக் கண்டு அறிந்துகொள்ளுதலைப் பற்றிக் கூறுதல் சுவடு கண்டறிதல் என்னும் துறையாகும்.