உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

141

தலைவியைத் தலைவன் யானைமேற் கொண்டு சென்றமை இச் செய்யுளால் புலனாம்.

அத்தி, அரசு, வஞ்சி ஆகிய மரவினப்பெயர்களை எடுத் தாண்ட நயம் கருதத்தக்கது. (75)

76. பெண்ணையே கூடுவார் பெண்ணையே வெட்டுவாரோ?

மடல் விலக்கு

கலி விருத்தம்

ஏறுடை அண்ணலார் ஏழை பாகனார் ஆறணி சென்னியார் அருணை வெற்பரே, கூறொரு பெண்ணையே கூட வேண்டுவார் வேறொரு பெண்ணையே வெட்டு வார்கொலோ!

(பொ-ரை) காளையூர்தியினரும், உமை ஒரு பாகத்தினரும், ஆறு அணிந்த தலையினரும் ஆகிய சிவபெருமானது அண்ணாமலையில் உள்ள தலைவரே, ஒரு பெண்ணைச் சேர விரும்புவர் வேறொரு பெண்ணை பனையை வெட்டத் துணிவாரோ? கூறுவீராக.

(வி-ரை) ஏறு

-

-

-

காளை; ஏழை - பெண்; பெண்ணை என்பதில் முன்னது மகளை என்னும் பொருளையும், பின்னது பனை என்னும் பொருளையும் தந்தது; மடலேறுதலை விலக்குதல் மடல் விலக்கு என்னும் துறையாகும்.

மடலேறுதல் என்பது ஒரு தலைவிமேல் காதல் கொண்ட தலைவன் அவளை அடையப் பெறாமல் வருந்தி அவளை அடைதற்கு வாயிலாக நீறுபூசி, எருக்குமாலை அணிந்து, தலைவியின் உருவத்தைப் படமாக எழுதிக் கையில் பிடித்துக் கொண்டு பனைமட்டையால் செய்த குதிரை மேல் ஏறுதல் ஆகும். அவ்வாறு ஏறாமல் விலக்குதல் மடல்விலக்கு எனப்படும். மடல் ஏறுதலைக் கண்ட சான்றோர் தலைவியின் குடும்பத்தாரை உடன்படுத்திக் கருதிய தலைவியைத் தருதல் வழக்கமாகும். பெண்ணைக்கூட வேண்டுவார், பெண்ணை வெட்டுவார் கொலோ' என்பதில் உள்ள சொல்நயம் உணர்ந்து இன்புறுக.

(76)