உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம்-38

77. வலங்கொண்டார் இடங்கொண்டாரே

தவம்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

வாய்ந்தநல மருந்தருந்தி அரிய யோக

வகைபுரிந்து வாயுவுள்ளே அடக்கி னாலும், காய்ந்தவிருப் பூசியிலே தவம்செய் தாலும்,

காயம்வருந் திடுவதல்லால் கதிவே றுண்டோ? ஆய்ந்ததிரு நீறணிந்தைந் தெழுத்தை ஓதி

அகமகிழ்ந்து சிவாகமத்தின் அடைவை ஓர்ந்தே ஏய்ந்தருணா சலத்தைவலங் கொண்டார் அன்றோ

இமைக்கு முன்னே கைலைமலை இடங்கொண் டாரே.

(பொ-ரை) நன்மையால் சிறந்த மருந்துகளை உண்டு, செய்தற்கு அரிய யோக நெறிகளை மேற்கொண்டு காற்றை வெளியே செல்ல விடாமல் உள்ளே அடக்கினாலும், தீயில் காய்ந்த இரும்பு ஊசிமேல் நின்று தவம் செய்தாலும் உடல் வருந்துவதே அல்லாமல் அடையும் நற்பேறு ஒன்று உண்டோ? உயர்ந்தோரால் ஆராயப் பெற்ற திருவெண்ணீற்றை அணிந்து, 'நமசிவய' என்னும் திருவைந்தெழுத்தை ஓதி, மனம் மகிழ்ந்து சைவ ஆகமத் திருமுறைகளை உணர்ந்து, அண்ணாமலையை அடைந்து வலம் வந்தவர் அல்லரோ இமைப்பொழுதுக்குள்ளே கைலைமலையைத் தமக்குரிய இடமாகக் கொண்டவர்.

(வி-ரை) முன்னிரண்டு அடிகளில் தவத்தால் பயனின் மையை விளக்கிப் பின்னிரண்டு அடிகளில் பயன் பெறும் வகையை விளக்கினார். தவம் செய்வாரை நோக்கிக் கூறியது இஃது என்பர். அடைவு - அடைவு செய்யப் பெற்ற நூல்கள்; ருமுறைகளும், சாத்திரங்களும்; 'வலங்கொண்டார் அன்றோ டங்கொண்டார்' என்பதில் முரண்நயம் அமைந்து

பொலிவூட்டுகின்றது.

(77)