உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

78. தண்மதியை வெங்கதிர் என்பாள் மாலை இரத்தல்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

இலங்கிய திங்கள் எழுந்தால் எங்கள்மின் வெங்கதிர் என்பாள் கலங்கனிள் ஆயினும் அன்னாள் கட்கம லங்குவி யாவோ? துலங்கிய வெங்கதிர் தானேய் சோணகி ரிப்பெரு மானே! அலங்கலை என்றுகொ டுப்பாய் அன்றது வெண்மதி யாமே. விளங்கிய கதிரோனுக்கு

143

(பொ-ரை) ஒப்பான அண்ணாமலைப் பெருமானே, எங்கள் மின்னற்கொடி போன்ற தலைவி, விண்ணில் விளங்கும் திங்கள் தோன்றினால் அதனை வெம்மையைத் தரும் கதிரோன் என்பாள்; மனக்கலக்கம் உடையவள் ஆயினும், அது திங்களாயிருந்தால் அவளது கண்ணாகிய தாமரை குவிந்து போகாதோ? நீ மாலையை எப்பொழுது கொடுப்பாயோ அப்பொழுதே அது வெண்மதியாக அவளுக்குத் தோன்றும்.

(வி-ரை) தோழி, தலைவிக்கு மாலை அருளவேண்டித் தலைவனிடம் உரைத்தது இது. 'கட்கமலம்' என்பது கண்ணாகிய கமலம் என்பதையும், கள்ளையுடைய (தேனையுடைய) கமலம் என்பதையும் தரும். கட்கமலம் குவியாவோ என்றது கண்ணுறக்கம் கொள்ளாமை குறித்தது. மின்-மின்னல் போன்ற தலைவி. அலங்கல் - மாலை.

"தலைவி திங்களை வெங்கதிர் என்கிறாள், அஃதுண்மையே! இல்லையேல் அவள் கண்ணாகிய தாமரை குவிந்திருக்குமே" எனத் தோழி தலைவி துயில் கொள்ளாமையை நயமுறக் கூறினாள்.

(78)

79. அரைக் கண்ணரும் கால் கண்ணரும் நேரிசை வெண்பா

ஆற்றுங்கால் கஞ்சத் தவர்தா மரைக்கண்ணர் சாற்றுங்கால் கண்ணரவர் தந்தையார் - கீற்றுமதி

சூடும் பெருமானைச் சோணகிரி வித்தகனைத்

தேடுவதிங் கெப்படியோ சேர்ந்து.