உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(பொ-ரை) பெற்றபொழுதில் நான்முகர் அரைக்கண்ண ராக இருந்தார்; அவர் தந்தையாராகிய திருமால் புகழ்ந்து கூறப்பெறும் கால்கண்ணராக இருந்தார்; இத்தகையவர் பிறைமதி அணிந்த பெருமானும் அருணைமலை அண்ணலுமாகிய சிவபெருமானைச் சேர்ந்து இங்குத் தேடிக் காண்பது எப்படிக் கூடுமோ?

4

-

(வி-ரை) கஞ்சத்தவர் -உந்தித் தாமரையில் இருப்பவர்; திருமாலின் அரைக் கண் தோன்றியவர் ஆகலின் அரைக் கண்ணர் என்றார்; கண் இடம்; பாதிக் கண்ணர் என்னும் பொருளும் தந்தது; கால் கண்ணர் கண்ணர்' என்றது திருமால் சிவபெருமானை வழிபட்ட காலையில் ஆயிரம் பூக்களுக்கு ஒன்று குறைந்ததாகத் தம் கண்ணில் ஒன்றைப் பறித்துக் காலில் மலராகப் பெய்தார். ஆதலால் காலில் கண் வைத்தவர் என்னும் பொருளில் கால் கண்ணர் எனப் பெற்றார். கால் என்பது பாதியில் பாதியைக் குறிக்கும் எண்ணுப் பெயராகவும் அமைந்து நயமூட்டியது. 'கால் கண்ணரும், அரைக் கண்ணரும் கூடி, முக் கண்ணரைத் தேடிக் காண்பரோ? காணார்' என அடி முடி தேடி அறிய முடியாமையைத் திறமாகக் கூறினார். திருமால் கண்மலர் சாத்தியமையை,

“பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர்பூக் குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலும்” (79)

என்பார் மாணிக்கவாசகர்.

80. செல்வர்க்கே செய்வர் சிறப்பு

கட்டளைக் கலித்துறை

சேணார் திருவுடைச் செல்வரைக் காணில் சிறப்புச்செய்து பேணா தவருமுண் டோபுவி மீதில் பெருத்தெழுந்து சோணா சலவடி வாய்வெளி யாய்நின்ற சோதிதனைக்

காணாத கண்ணனைச் சொல்வர்செந் தாமரைக் கண்ணனென்றே.

(பொ-ரை) மிகுந்த சிறப்பினையுடைய செல்வரைக் கண்டால் இவ்வுலகில் அவர்க்கு மேலும் சிறப்புச் செய்து பேணிக் கொள்ளாத வரும் உண்டோ?இல்லை; ஆதலால் உயர்ந்து தோன்றி அண்ணாமலை வடிவாகவும் பெருவெளியாகவும் நின்ற பேரொளியைக் காணமாட்டாத காணமாட்டாத கண்ணையுடைய திருமாலை உலகோர் செந்தாமரைக் கண்ணன் என்று சொல்வர்.