உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

145

(வி-ரை) "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு

என்னும் திருக்குறளை ஊடகமாகக் கொண்டது இச் செய்யுள். திருமால் திருமகளை உடையவர் ஆதலாலும், பொன்னாடை யும் மணியணியும் உடையவர் ஆதலாலும் அச் செல்வச் சிறப்பு நோக்கி, காண மாட்டாக் கண்ணுடையாரைச் செந்தாமரைக் கண்ணர் என்பார் என நயமாகக் கூறினார். 'திருவுடைச் உண்டோ' என்னும் பொதுப் பொருளை வலியுறுத்தச் 'சோதிதனை என்றே' என்னும் சிறப்புப் பொருளை வைத்தமையால் இச் செய்யுள் வேற்றுப் பொருள் வைப்பணி அமைந்ததாம்.

(80)

81. நெஞ்சமே என்சொல்வாய்? நேரிசை வெண்பா

என்றுமதிக் கண்ணார் இறைவரரு ணாபுரியில் நின்று தவம்புரியாய் நெஞ்சமே! - பொன்திரளான் மாதரையான் ஆயிழைசூழ் மாதரையான் நீதுவண்டு மாதரையா னாமையென்சொல் வாய்?

(பொ-ரை) மனமே, நீ ஞாயிறு திங்களைக் கண்ணாக வுடைய சிவபெருமானது அருணைப்பதியில் நிலைத்துத் தவம் செய்யாய்; பொற்குவியலானும், விரிந்த நிலத்தானும், தேர்ந் தெடுத்த அணிகலங்களை அணிந்த மகளிரின் அழகானும் வாட்டமுற்று ஆவலை விடாமைக்கு என்ன காரணம் சொல்வாய்?

-

(வி-ரை) என்று கதிரோன்; மதி - திங்கள்; 'மாதரையான்' என்பதில் முன்னது 'மா தரையான்' எனப் பிரிந்து விரிந்த நிலத்தால் எனவும், பின்னது, 'மாதர் ஐ ஆன்' எனப் பிரிந்து மாதர் அழகால் எனவும் பொருள் தந்தது. ஈற்றடியிலுள்ள 'மாதரை யானாமை' என்பது 'மாதரை ஆனாமை' என நின்று ஆசையை விடாமையைக் குறித்தது; மாதர் - ஆசை. இதில்பொன், மண், பெண் ஆகிய மூவாசைகளைக் குறித்தார். பின்னிரண்டடி களும் மடக்கு.

(81)